Subscribe Us

அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளை


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

மனைவி சகிதம் வௌிநாடு சென்று திரும்பி வந்து பார்த்த போது, கொள்ளுப்பிட்டி - தேர்ஸ்டன் வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். 

சுமார் 51 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. 

எதுஎவ்வாறு இருப்பினும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments