Subscribe Us

header ads

கரம்பையில் கல்பிட்டி – அக்கரைப்பற்று பஸ்ஸின் மீது கல் வீச்சு..!! பொறாமைக் காரணம்..?










CTB bus




















புத்தளம் கரம்பை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பஸ் சாரதி உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் காணப்படாத குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் பஸ்சின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதே மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய தனியார் பஸ் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments