Subscribe Us

header ads

சம்பள விவகாரத்தால் போட்டிகளை கைவிட்டு தாயகம் திரும்புகிறது மேற்கிந்திய அணி!

இந்தியாவில் போட்டிகளில் பங்குபற்றிவரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியினர் இச்சுற்றுலாவை இடையில் நிறுத்திக்கொண்டு தாயகம் திரும்பத் தீர்மானித்துள்ளர்.

அவ்வணி வீரர்களின் சம்பளம் தொடர்பாக மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையிலான இழுபறி நிலையே இதற்குக் காரணம். இன்று நடைபெறும் 4 ஆவது ஒருநாள் போட்டியே இச்சுற்றுலாவில் மேற்கிந்திய அணி பங்குபற்றும் கடைசி போட்டியாகும்.


5 ஆவது ஒருநாள் போட்டி இருபது20 போட்டியொன்று மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றாமல் மேற்கிந்திய அணி தாயகம் திரும்பவுள்ளது.


இதனால் மாற்று அணியொன்றுடன் இந்திய அணியை போட்டிகளில் பங்குபற்ற வைக்க இந்திய கிரிக்கெட் சபை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இலங்கை அணியை அழைப்பதற்கு அவர்கள் விரும்புதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments