தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம்
விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த
வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் கடந்த
2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின் போது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்
புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான்
தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.
மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது
ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. TM


0 Comments