சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இன்று காலை முதலே தமிழ்நாடு முழுவதும் நிலவியது.
காலையில்
அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா விடுதலை ஆகி விடுவார் என்ற
நம்பிக்கையில் இருந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு ஜெயலலிதா குற்றவாளி என்று
அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த
நிலையில் ஜெயலலிதாவுக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுமோ என்ற தவிப்பு
அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டது. பெங்களூரில் அவர்கள் ஆலோசனை
நடத்தினார்கள்.
ஜெயலலிதாவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டால்
என்னென்ன நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து ஜெயலலிதாவை ஜாமீனில் உடனே எடுப்பதற்கான ஏற்பாடுகளும்
செய்யப்பட்டன.
நன்றி;மாலைமலர்


0 Comments