Subscribe Us

header ads

ஆண் மீது பெண் வல்லுறவு: அதிர்ச்சியில் ஆண்


ஆணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வொஷிங்டன், சீட்டில் நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.

இவர், 31 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆணின் கைகளை கட்டிபோட்டுவிட்டு, இக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழ்ந்த நித்திரையில் இருந்த குறித்த நபர், அதிகாலை 2 மணியளவில் திடீரென கண் விழித்துப் பார்த்தபோது, தான் பெண்ணொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளார்.

கடுங்கோபமடைந்த அந்நபர், அருகிலிருந்த பெண்ணை அடித்து பலவந்தமாக வெளியே துரத்தியதுடன், தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டையடுத்து, குறித்த பெண்ணை கைதுசெய்த பொலிஸார் அவரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தினர்.  

தான் பைபோலார் எனும் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments