Subscribe Us

header ads

ஜனாதிபதி – நரேந்திர மோடி நிவ்யோர்க்கில் சந்திப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நிவ்யோர்க்கில் சந்திப்பொன்று நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வின்போதே இச்சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் 69ஆவது பொது அமர்வு செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.  பொது விவாதம் செப்டெம்பர் 24ஆம் திகதி இடம்பெறும்.

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 25 ஆம் திகதி உரையாற்றவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செப்டெம்பர் 27 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னரே இவ்விருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments