பகல் 2.25 மணியளவில் பெங்களூர்
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான
குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற
வழக்கறிஞர் பவானி சிங் ‘தி இந்து’விடன் கூறியதாவது: “சொத்துக் குவிப்பு
வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும்
நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும்
இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து
தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு
தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க
வேண்டும் என வாதிடும்” என்றார்.
The Hindu


0 Comments