13 கிலோ நிறையுடைய வல்லப்பட்டையை
கடத்திச்செல்ல முற்பட்ட சீனப்பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்லபட்டையை கடத்திச்செல்ல முற்பட்டபோது அவரை தாம் கைது செய்தனர் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேஷியா வழியாக, சீனாவின் ஷாங்காய்
நகருக்கு இவர் செல்லத் தயாராக இருந்தார் என்றும், அவர் வைத்திருந்த பை
ஒன்றில் வல்லப்பட்டை மறைத்துவைத்திருந்தமை கட்டுபிடிக்கப்பட்டது என்றும்
சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளின் மதிப்பு பத்து மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments