வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கபட்ட அதேவேளை சற்றுமுன் தண்டனை அறிவிக்கபட்டது.
ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ. 25 கோடி அபராதம்- ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்
-அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது!
-ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்
-4 வருட சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் இல்லை
-ஜெயா, சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே சிறைக்கு சென்றே ஆக வேண்டும்
-ஜெயலலிதாவுக்கு ரூ. 25 கோடி அபராதம்
-சசிகலாவுக்கும் ரூ. 25 கோடி அபராதம்
-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 25 கோடி அபராதம்
-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு
-10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!
-ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை
-ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!
கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. முதலில் பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார்.
மேலும் மாலை 3 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் மாலை 5 மணியளவில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது.
அதே நேரத்தில் அவரது எம்எல்ஏ பதவியும் விரைவில் பறிக்கப்படும்.
4 ஆண்டு சிறை தண்டனை என்பதால் இந்த நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீனும் கிடைக்காது. இதனால் நீதிமன்றத்தில் இருந்து அப்படியே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.
இவர்கள் அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தான் ஜாமீன் கோர முடியும். ஆனால், அடுத்த 10 நாட்கள் தசராவுக்காக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments