Subscribe Us

(Flash News)நாளைய SLTJ ஆர்பாட்டம் தொடர்பாக சற்றுமுன் கிடைத்த செய்தி….

சற்றுமுன் நாளை சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இஸ்ரேலை கண்டித்து நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டக்கும் பொதுபலசெனா ஏற்பாடு செய்திருந்த இஸ்ரேல் ஆதரவு ஆர்ப்பாட்டத்துக்கும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள செய்தி கிடைத்தது.
இவ்விடயம் தொடர்பாக சற்று முன் மடவளை நியூசுக்கு தொடர்பு கொண்ட சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாத் துணை செயலாளர் ரஸ்மின்  புறக்கோட்டை ரயில் நிலையம் அருகில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே  நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நாளைய தினம் தமது அமைப்பு ஏற்பாடு செய்த இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்பாட்டம் மாளிகாவத்தை சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை காரியாலயம் முன்பாக முன்னர் அறிவித்த நேரத்தில் ஆரப்பமாகும் என தெரிவித்தார்.
சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முன்னதாக குறித்த ஆர்பாட்ட ஊர்வலம் மாளிகாவத்தை சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை காரியாலயம் முன்பாக துவங்கி ஊர்வலமாக சென்று புறக்கோட்டை ரயில் நிலையம் அருகில் முடிவுரும் என அறிவித்திருந்தது.புறக்கோட்டையில் ஆர்பாட்டம் நடாத்த நீதிமன்ற தடை இருப்பதால் குறித்த ஆர்பாட்டம்  முடிவடையும் இடம் தொடர்பாக தமது அமைப்பு ஆலோசித்து வருவதாகம் இது சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என  தெரிவித்தார்.
Thanks : madawala news

Post a Comment

0 Comments