முஹம்மத் அஹமத் றாஷித்
தமிழில்:அஷ்ஷெய்க் இக்ராம் நஸீர்
தகவல் மூலம்: நகர்வுக்கான பாதை
“மூஃமின்களுக்கு நன்மாராயனம் கூறுங்கள்.”
அல்லாஹ் அவர்களுக்கு “அல்லாஹ்வின் உதவியையும் அண்மித்த வெற்றியையும்” கொடுக்கக் காத்திருக்கிறான்.
வேதனையின் ஆழம் நீண்டிருந்த போதிலும் எனது உள்ளத்தில் அமைதி குடியிருக்கிறது. நான் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன். ஏனெனில் இந்த சோதனை இறுதியாய் எமக்கு சார்பாய் பிரசவிக்கும். முனாபிக்குகளும் அநியாயக் காரர்களும் தோற்றுப் போவார்கள். முர்ஸியோ அவருக்கு ஈடான இன்னோர் சகோதரனோ தலைமைக்கு மீண்டும் வருவார்கள். மீண்டும் எந்த மோசடிகளும் இன்றி சுதந்திரமான ஒரு தேர்தல் நடக்குமாயின்,அதில் கிடைக்கும் புதிய வெற்றி அரசியல் வரலாற்றிலேயே கண்டிராத நூற்றுவீதத்தில் அமைந்திருக்கும். கஷ்டத்தின் பின்னரான விடிவாய் அது இருக்கும். சோகத்தின் பின்னரான மகிழ்வாக அது இருக்கும்
இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான நெருக்கம் இன்னும் இன்னும் அதிகரிக்கும். அதன் எல்லா வகையான தலைமைகளுக்கிடையேயும் அன்பும் புரிந்துணர்வும் இன்னுமின்னும் அதிகரிக்கும். இதே போன்று அங்கத்தவர்களுக்கிடையேயும் இந்த புரிந்துணர்வு அதிகரிக்கும். மில்லியன் கணக்கானவர்கள் இந்த ஈமானிய தர்பியத்தின் பாசரையில், ஷரீஆ அறிவைப் பெறும் மஜ்லிஸ்களில்,சமூக சீர்திருத்த செயற்பாடுகளில் இணைந்து கொள்வர். இதனால் இஸ்லாமிய அணி மும்மடங்காக அல்லது அதனைப்பார்க்கிலும் அதிகமாய் அதிகரிக்கும். சில போது அது பத்து மடங்காய் அதிகரிக்கலாம். ஏனெனில் வெற்றியும் சுதந்திரமான சூழலும் உறங்கிக்கிடக்கும் ஆழுமைகளை அதன் விலங்குகளிலிருந்து விடுவிக்கும். தாஈக்கள் குடியரசின் தலைமைகளாக முன் செல்வர். உள்ளங்கள் ஆசுவாசமடையும், சிந்தனைகள் தூய்மை பெறும்,நகர்வுகள் தெளிவாயமையும்,ஈமான் விசாலிக்கும்,போராட்ட உணர்வுகள் ஆர்ப்பரிக்கும். இவையனைத்தும் யுதர்களுடனான இறுதிப் போருக்கான முன்னாயத்தமாய் அமையும். இஸ்ரேல் அழிந்தொழிந்து போகும்.
ஸியோனிஸத் தலைவர்கள் செய்த மடமைத்தனமான செயல் என்ன தெரியுமா? அவர்கள் மதச் சார்பற்ற சக்திகளை தூண்டி ஜனாதிபதி முர்ஸியை வீழ்த்துவதற்காக அவர்களை கூலிக்கமர்த்தியமைதான் அது. தற்காலிகமான இந்த வீழ்ச்சி, ஸியோனிஸத்தின் தேசத்தையே அழித்துவிடும் ஒரு போராட்டத்தில் கொண்டு போய் விடும் தொடர்ந்தேர்ச்சையான இஸ்லாமிய எழுச்சிக்கு வழி வகுக்கும் என அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. அல்லாஹ் மீதாணையாக நான் அதனை இந்த நிகழ்வுகளில் வாசிக்கின்றேன். அதனை தெய்வீக நியதிகளின் பயணப் பாதையில் காண்கிறேன். அல்லாஹ் எகிப்தினுள்ளே அசத்தியத்தை துடைத்தழித்து விடுவான் என்பதற்கான சமிக்ஞைகளை நான் அதிலே போதியளவு காண்கிறேன். பின்னர் எகிப்து, அனியாயக்காரர்களிடமிருந்து எப்படி தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்பதற்கு ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.அதன் விளைவாக தூய்மையும் தெளிவும் கொண்ட ஒரு தலைமையின் கீழ், ‘அல்லாஹு அக்பர்' என பொறிக்கப்பட்ட ஒரு பச்சைக் கொடியின் நிழலில் தெளிவான இஸ்லாமிய வழியிலமைந்த ஒரு போராட்டத்துக்கான அழைப்பு இடம் பெறும். அதில் தெளிவான வெற்றியை இஸ்லாமிய வாதிகள் பெறுவர். அந்த வெற்றி இப்போதிருந்து ஒன்பது அல்லது பத்து வருடங்களில் 2022இல் இடம் பெறும்.
இதனை நான் எனது முன்னைய நூல்களிலும் விரிவுரைகளிலும் கூறியிருக்கிறேன். இதற்கான ஆதாரம் ‘தல்மூத்` இல் காணப்படுகிறது. பலபோது இது முன்னர் பனூஇஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட நபிமார்களது திரிபுபடுத்தப்படாத ஒரு வாக்காக இருக்கலாம்.
இஸ்ரேல் நிறுவப்பட்டு சரியாக 76 சந்திர வருடங்களின் பின்னர் இது நிகழும். இதன் போது ஹாலி(HALLEY)என்கின்ற வால் மீன் (COMETS)சூரியனில் இருந்து தொலைவில் கீழாக வரும் என்று அதற்கான அடையாளமும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நுணுக்கமான வானவியல் கணிப்பீட்டின் படி நாம் மேலே கூறிய வருடத்தில் இடம் பெறும் என்பதும் வானவியல் ஆய்வுகளில் கூறப் பெற்றுள்ளது. உஸ்தாத் பஸ்ஸாம் ஜர்ராரின் “இஸ்ரேலின் அழிவு” என்கின்ற நூலில் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்ற விரிவான ஆதாரங்களைக் காணலாம்.
ஷெய்க் ஸபருல் ஹவாலி இது தொடர்பில், 'தல்மூத்தில்' இடம் பெற்றுள்ள பனூஇஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு நபி அன்றிருந்த பபிலோனிய அரசன் நுபுவ்கத் நுஸ்ஸர் என்பவனது கனவுக்கு விளக்கம் சொன்ன குறிப்பொன்றை வைத்து இஸ்ரேலின் முடிவு சம்பந்தமாக கூறுகின்றார். அந்தக் கனவு விளக்கத்தின் படி 2012 இல் இஸ்ரேல் அழிய வேண்டும். எனினும் அந்த ஆண்டு கடந்தும் அது இன்னும் நிகழவில்லை.
அந்த வகையில் இந்த இரு அறிவிப்புக்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கின்ற போது, பலஸ்தீன விடுதலைக்கான இஸ்லாமிய வாதிகளின் போராட்டம் 2012 இல் துவங்கும். இதனை நாம் 'காஸா' போராட்டத்தில் நின்று பிடிப்பதில் இருந்து குறிப்பிடலாம். போராளிகளிடம் ஏவுகணைகள் தாராளமாய் காணப்படுகின்றன. படையினரின் அணி எண்ணிக்கையிலும் பலமாய் உள்ளது. புமிக்குக் கீழால் அதனது சுரங்க வலைப்பிண்ணல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகின் எல்லா இடங்களிலும் இஸ்லாமிய எழுச்சியலை முன்னே செல்கின்றது. இதன் விளைவாய் 2022 இல் இறுதிப்போர் மூழும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.


0 Comments