Subscribe Us

header ads

ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம். பாலஸ்தீன தாக்குதலின் எதிரொலியை பாருங்கள்.

-இம்ரான் Sls-

கடந்த ஒரு மாதமாக அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. அதுமட்டுமல்லாது பல்வேறு ஐரோப்பிய,அமெரிக்க  நாடுகளின் மக்கள்  இஸ்ரேல் நாட்டு உற்பத்தியை புறக்கணித்தும் வருகின்றனர்.
இதன் எதிரொலியாக நேற்றைய தினம் அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தில் இஸ்ரேலிய தயாரிப்புகளான MC donalds,Coca Cola, Pepsi ஆகிய உற்பத்திகளுக்கான கேள்வி விகிதம் வரலாற்றில் என்றுமில்லாதளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் இஸ்ரேலிய பொருளாதார அமைச்சரும் அச்சம் வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது Coca Cola குளிர்பான விற்பனையானது மிகவும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் முதன் முதலாக Coca Cola விற்பனையை தடைசெய்த நாடு துருக்கிதான்.
துருக்கியிலுள்ள பல்வேறு உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களிலுள்ள அணைத்து Coca Cola,Pepsi குளிர்பானங்களும் கடந்த வாரம் முதல் வீதியில் வீசப்பட்டும் அளிக்கப்பட்டும் வந்தது.
இன்று அநேகமான நாடுகளில் Coca Cola, Pepsi ஆகிய குளிர்பானங்கள் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் எனும் அளவிற்க்கு தற்பொழுது மிகவும் இக்கட்டான பொருளாதார நெருக்கடியை இஸ்ரேல் சந்தித்து வருகின்றது.

Post a Comment

0 Comments