Subscribe Us

கற்பிட்டியின் கல்விப் பிரச்சினைக்கு தீர்வுத்தான் என்ன ? கற்பிட்டி குடிமகன், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் கட்டாயம் வாசிக்கவும்.


கற்பிட்டியின் கல்விப் பிரச்சினை தொடர்பான எமது பதிவிடல்களுக்கான கருத்தாடல்கள் comments நாம் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. குறிப்பாக முதலாது தொடரின் காணப்பட்ட ஓரிரு comments களை விட வேறு எதனையும் எம்மால் அவதானிக்க முடியவில்லை
(குறிப்பாக கற்பிட்டிக் குரல் முகநூல் குழுமத்தில் அங்கம் வகித்துவரும் சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் கூட எவ்விதமான பிரதிபளிப்புகளையும் வெளிப்படுத்தாமை விசேடமாக எம்மால் அவதானிக்கப்பட்டது. இவர்கள் கற்பிட்டியின் சமூக முன்னேற்றத்திற்கு ஏதேனும் செய்வார்கள் என்ற எமது நம்பிக்கை எம்மிடையே நிலவியது


எவ்வாறாயினும்  எமது ஆக்கங்கள் நீண்டவையாகி, அதனை வாசிப்பதற்கு போதிய நேரமின்மையால் கற்பிட்டியின் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்விமான்கள் அதனை வாசிக்க நேரம் ஒதுக்காமல் இருந்துருக்கலாம். அத்துடன் கற்பிட்டியின் சமூகப் பிர்ச்சினைகளை விளங்கிக் கொள்வதிலான தேவையின்மை, அக்கறையின்மை, ஆர்வமில்லாமை போன்ற காரணங்களாலும் கருத்தாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாது போயிருக்கலாம்.
எனினும் இவ்விடயத்தில் எமது கற்பிட்டிச் சமூகத்தின் ஒரு பண்பை அவதானிக்க முடியும்
கற்பிட்டியின் சமூகத் தலைமைகள் அல்லது சமூகம் அவற்றின் செயற்பாட்டு எல்லைகளுக்கப்பால் அமைந்த விடயங்களை புறந்தள்ளி விடுவர். தமது அறிவுக்கும் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட விடயங்களை அல்லது புரிந்து கொள்ள (வேண்டிய ஆனால்) முடியாத விடயங்களை மலினமாக்கி ஓரங்கட்டி வைத்து விட்டு, தமது அறிவுக்கும் ஆற்றல்களுக்கும் பொருந்தி வரும் விடயங்களை கையாள முற்படுகின்ற சமூக இயல்பானது புதிய மாற்றங்களைக் காண விரும்பும் கற்பிட்டி சமூகத்திற்கு எவ்வகையிலும் மீட்சியைப் பெற்றுத்தராது.

இத்தகைய எல்லைப்படுத்தப்பட்ட சிந்தனையோட்டத்தின் மத்தியில் சமூகத்தின் பழைய கருத்துக்களிலும், கொள்கைகளிலும் மூழ்கி தேங்கி சமூக ஆர்வலர்கள் இருப்பதால் முன்னேற்றங்களை காண முடியாதுள்ளது
உண்மையில் கற்பிட்டியின் சமூகப் பிரச்சினைகளானது கற்பிட்டி சமூகத்தினதும், அதன் தலைவர்களினதும் கைகளை விட்டுப்போய் நீண்ட நாட்களாகி விட்டன. ஆனால் இவ்வுண்மையை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிப்பதில்லை சிந்திப்பதுமில்லை. ஏனென்றால் அதனால் கற்பிட்டியின் மானம் மரியாதைக்கு இழுக்கேற்பட்டு விடும், தலைவர்களின் கௌரவம் பாதிப்படையும் என நம்புவதால் இந்நிலைமை காணப்படுகின்றது. ( இச்சமூக பலவீனத்தை உணர்ந்து அதற்கான மாற்று வழிகளை கடைப்பிடிக்க முன்வருதல் மாற்றத்தின்முதற்படியாகும்துரதிஸ்டவசமாக கௌரவத்தையும் தனித்துவத்தையும், அரசியல் செல்வாக்கையும் ( அப்படி எதுவும் இல்லாத போதும்) முன்னிறுத்துவதால் கற்பிட்டி சமூகம் மற்றும் தலைமைத்துவங்கள் முன்னேற்றம் அல்லது சமூக மாற்றங்களுக்கான முதலாவது படியிலேயே சறுக்கி விழுந்து கொண்டிருப்பதே யதார்த்தமாகும்.
இத்தகைய பின்னணியில் கற்பிட்டி சமூகம் கல்வி தொடர்பான பிரச்சினைகளை ஆராய முற்படும், மாற்று கருத்துக்ளை தெரிவிக்கும் என எதிர்பார்த்தமை எமது பலவீனமாகவும் அறியப்படலாம்.
எவ்வாறாயினும் கற்பிட்டி சமூக ஆர்வலர்களின் விருப்பு வெறுப்புகளுக்கப்பால் எமது சமூக கடமையை நிறைவேற்றுவது ஒவ்வொரு தனிமனிதனதும் கடமையும் பொறுப்புமாகும். அதனை K-First குழுவினர் ஒன்றிணைந்து தம்மால் இயன்ற வரையில் முழுமையாக நிறைவேற்றுவர். அதற்கு களம் தந்து பலம் சேர்க்கும் Kalpitiy Voice குழுவினர்க்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு எமது பணிகளைத் தொடர்கின்றோம்.
மாற்றங்களை நோக்கிய எமது பயணத்தில் தற்போது தீர்வுகளை நாடி பயணிக்கும் வேளையிது.
கற்பிட்டியின் சமகால கல்வி நிலை அதற்கான பின்னணிகள் மற்றும் நபர்களின் வகிபாகம் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
இதன் இறுதிக் கட்டமாக தீர்வுகள் முன்வைக்கப்படுதல் வேண்டும். தீர்வுகளை பற்றி பேசுவதற்கு முன்பாக பிரச்சினைகளின் வலாறு பற்றி தெரிந்திருப்பர் மிக முக்கியம் அதனால் பிரச்சினைகள விரிவாக ஆராய நேரிட்டது. ( இதனை கருத்திற் கொள்ளாத எந்த தீர்வுகளும் எதிர்பார்த்த வெற்றிகளை தராது அதே வேளை இவற்றைக் கருத்திற்கொள்ளாமல் தீர்வுகளைப் பற்றி பேசுவதும் பொருத்தமற்றதாகும்.)

கற்பிட்டியின் கல்விப் பிரச்சினைக்கு தீர்வுத்தான் என்ன ?

சுருக்கமாக கூறுவதாயின்
பேச்சு வார்த்தை
அது எப்படியானதாக இருக்க வேண்டும்?

Ø  திறந்த மனதுடனான பேச்சுவார்தையாக இருக்க வேண்டும்,


Ø  மற்றவர்களின் கருத்தையும் மதித்து சீர்தூக்கும் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  உண்மையான சமூக ஆர்வலர்களின் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  தனிநபர் செல்வாக்கை முன்னிறுத்தாத பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  அரசியல் இருப்புக்காக அன்றி கற்பிட்டியின் இருப்புக்கான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  தீர்வுகளை நோக்கியதான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கும் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  துறைசார்ந்த அனுபவஸ்தர்களின் வழிகாட்டல்களுடனான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  கற்பிட்டியின் நடைமுறைக்கேற்ற பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  உடன்பாடுளுடனான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  பொருத்தமற்றக் கருத்துக்களை நாகரீகமாகவும் கௌரவத்துடனும் மறுக்கும் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  இருபக்க கருத்துக் பரிமாறல்களுடனான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø  கருத்து திணிப்புகளற்ற பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்,


Ø பிரச்சினையை விளங்கிக் கொள்வதற்கான வாய்புடைய பேச்சுவார்தையாக இருக்க வேண்டும்,


Ø  நவீன விஞ்ஞான வழி முறையிலமைந்த பேச்சுவார்தையாக இருக்க வேண்டும்,


Ø  முக்கியமாக அனைவரும் பேச்சுவார்தையாக இருக்க வேண்டும்,

இத்தகைய பேச்சு வார்த்தைகளே எமது பிரச்சினையைத் தீர்க்கும் வல்லமையுடையன. நடைமுறைச் சாத்தியமான விடயங்களில் எமது கவனங்கள ஒரு முகப்படுத்துவதற்கும் தீர்வுகளை எடுப்பதற்கும் அதனை எல்லோரும் விளங்கிக் கொள்ளவும் பேச்சு வார்த்தைகளே சர்வதேசப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுத் தருகின்றன.

அதில் நாம் ஏன் நம்பிக்கை வைக்க கூடாது? எங்களால் பேசித்தீர்த்துக் கொள்ள முடியாத விடயமா கற்பிட்டியின் கல்விப் பிரச்சினை? மற்றவர்கள் வந்து எமது பாடசாலையின் பிரச்சினைகள தீர்த்து வைப்பார்கள், கல்வி மட்டத்தை உயர்த்துவார்கள் என நம்பித்தானே பல அதிபர்களை வரவழைத்தோம். அதனால் எதை சாதித்தோம்

நாங்கள் ஏற்கனவே உச்சத்தை அடைந்தவர்கள். ஏன் மீண்டுமொரு அதனை எங்களால் அடைய முடியாது? அதற்கான ஆற்றல்களும் அறிவும் எம்மில் இல்லையா? உட்கார்ந்து பேசுவோம். அதன் மூலம் நல்ல பல விடயங்களை தீர்வுகளாக பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒன்று சேர்வோம். அதற்கான ஆற்றலும் அறிவும் உள்ள கல்பிட்டியின் சமூக ஆர்வலர்கள் மத்தியில் உள்ளன

இத்தகைய பேச்சு வார்த்தைகளின் மூலம் நாம் அடைய வேண்டிய தீர்வுகள் எவையென நாம் அடுத்து வரும் பதிவுகளில் ஆராய்வோம்.
K-1st. 


கற்பிட்டி குடிமகன், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் கட்டாயம் வாசிக்கவும். உங்கள் கருத்தாடல்களை (comments) ஒரு இடத்தில் பெற்றுக்கொள்ளும் முகமாக Kalpitya Voice Facebook Group இல் Pin Post பண்ணப்பட்டுள்ளது உங்கள் கருத்தாடல்களை (comments),அதில் Post செய்யுங்கள். 

Post a Comment

0 Comments