Subscribe Us

இஸ்ரேலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தால் நாங்கள் ஆதரவாய் களமிறங்குவோம்: ஞானசார சூளுரை



கொழும்பில் நாளை 13ம் திகதி இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை தாம் ஒழுங்கு செய்வதாக SLTJ அமைப்பு தெரிவித்திருக்கும் நிலையில் அவ்வாறு ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் இறுதி யுத்தத்தின் போதும் தொடர்ந்தும் இலங்கைக்கு பல்வேறு தொழிநுட்ப உதவிகளை வழங்கி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக தாமும் களமிறங்க நேரிடும் என  ஞானசார சூளுரைத்துள்ளார்.

எனினும் எவ்வகையான எதிர்ப்பு வந்தாலும் தாம் ஆர்ப்பாட்டத்தை நடாத்தப்போவதாக SLTJ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தடை செய்யப்பட வேண்டிய ஒரு அமைப்பை இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் செய்ய அனுமதித்தால் அது நாட்டிற்கு பங்கமான விடயமாக மாறும் என பொது பல சேனா தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தன் கடமையைச் செய்யத் தவறினால் தாம் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நடவடிக்கையில் இறங்குவோம் என கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் வாராந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் மனிதாபிமான அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் அவ்வார்ப்பாட்டங்களில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-Ceylon Moors-

Post a Comment

0 Comments