Subscribe Us

''சிங்களவர்கள், இஸ்ரேலியர்களுக்கு உறவினர்கள்''

(ஹமீட் அப்துல் கரீம்)
ஆகஸ்ட் 2, 2014 “சண்டே ரைம்ஸ்” ஆசிரிய தலையங்கத்தைப் படித்து நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தேன், அதில் நீங்கள் ஹமாஸை தற்போது அழிக்கப்பட்டிருக்கும் எல்.ரீ.ரீ.ஈ உடன் நேரடியாக ஒப்பிட்டு, ஹமாஸ் இயக்கத்தையும் கூட ஒரு பயங்கரவாத அமைப்பு என முழு உலகமும் நம்பவேண்டும் என்று இஸ்ரயேலும் மேற்கிலுள்ள அதன் பின்துணையாளர்கள் என அழைக்கப்படும் சர்வதேச சமூகமும் விரும்புகிறது என்றும் தெரிவித்து இருந்தீர்கள்.
முழு உலகத்துக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம்களுக்கு இது ஒரு கண்டனத்துக்குரிய காலம் என்பது தெரியும், எனவே ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நான் கூறினால் நான் ஒரு ஆபத்தின் அடிப்படையில் நடப்பது போலத் தோன்றலாம். மேலும் மற்றவர்களின் கைப்பொம்மையாக இயக்கப்படும் இஸ்லாமிய நாடான பாக்தாத்தின் கலீபாவை போன்ற பயனுள்ள முட்டாள்கள் எழுப்பும் “இஸ்லாமிய பயங்கரவாதம்” எனும் கெட்ட பெயரான ஒலிக் குவியலின் எதிரொலி, உலக ஊடக மையங்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்பதும் எனக்குத் தெரியும்.
சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தல்
ஆனால் ஹமாஸ் ஜனநாயகப்படி தெரிவானது என்பதை தயவு செய்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள், அந்தத் தேர்தலை கண்காணித்த ஜிம்மி கார்ட்டர், தேர்தல் நடவடிக்கை சுதந்திரமாகவும் மற்றும் நீதியாகவும் நடைபெற்றதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் அந்த அறிக்கைகள் எதுவும் “ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு” என அடிக்கடி கூறிவரும் எந்த இடத்திலுள்ள எந்த ஊடகத்திலும் வெளிவரவேயில்லை. நாங்கள் அடிக்கடி கேட்கும் பதமான மக்களின் விருப்பம்தான் ஜனநாயகத்தை தீர்மானிக்கிறது என்பது உண்மையானால் ஹமாஸ் அமைப்பினை ஒரு தெரிவு செய்யப்பட்ட அமைப்பாக உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் தேவைப்பட்டால் அடக்குமுறை மற்றும் படுகொலைகள் நடக்கும்போது அவர்கள் அதற்கு எதிராக சட்டபூர்வமான போராட்டம் நடத்தும்போது அதற்கு உலகம் ஆதரவளிக்க வேண்டும், அதற்கு சர்வதேச சட்டம் அனுமதி அளித்துள்ளது,
இதே வழியில்தான் ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிரான்சிய எதிர்பு;பு இயக்கம் போராடியபோது அது அதரவளித்தது. ஆனால் உலகம் விசேடமாக சர்வதேச சமூகம் என அழைக்கப்படுவது நியாயமின்றி பக்கச் சார்பாக நடக்கிறது. நாஸிக்கள் பிரான்சிய எதிர்ப்பு இயக்க போராளிகளை பயங்கரவாதிகள் என மாற்றிச் சொன்னார்கள், அனால் உலகம் அவர்களுக்கு ஆதரவளித்தது. தங்கள் நாட்டின்மீது ஜேர்மனி நடத்தும் ஆக்கிரமிப்புக்கு எதிரான சட்டபூர்வ போராட்டம் என்பதைப் பொறுத்தமட்டில் அது மிகவும் சரியானது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
மேற்கத்தைய அதிகார சக்திகள் தென்னாபிரிக்காவில் நடந்த வெள்ளையர் மேலாதிக்க ஆட்சிக்கு அதன் இறுதிக் கட்டம் வரை ஆதரவளித்ததை நாங்கள் அனைவரும் அறிவோம். முன்னாள் அமெரிக்க உதவி ஜனாதிபதி டிக் செனி, பயங்கரவாதி நெல்சன் மண்டேலாவை றொபேன் தீவிலிருந்து விடுதலை செய்ய வெண்டாம் என்று டீ கிளார்க்கிடம் சொன்னார், மற்றும் றொனால்ட் ரீகனின் விருப்பத்தின் படி அவருடன் இணைந்து மார்கிரட் தச்சர் நிறவெறி பிடித்த நாடான தென்னாபிரிக்காவை மேற்கத்தைய நாகரிகத்தின் புறக்காவல் என வர்ணித்தார். அதே கதைதான் இஸ்ரயேலுக்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை தென்னாபிரிக்க இனவெறி ஆட்சி கலைக்கப் படாமலிருந்து மற்றும் கறுப்பர்கள் இன்னமும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினால் ஆபிரிக்க தேசிய காங்கிரசை ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நீங்கள் அழைக்க வேண்டும்?
இஸ்ரயேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தி
இஸ்ரயேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தி மற்றும் நாதியற்ற நிராயுதபாணியான குடிமக்கள் மீது அது நடத்திவரும் சொல்லிலடங்கா குற்றச்செயல்கள் மிகவும் கொடூரமானவை, ஐரோப்பிய யூத குடிமக்களுக்கு எதிராக ஜேர்மனியர்கள் நடத்திய குற்றங்களுடன் தொடர்புடையவை. அதே யூதர்கள்தான் அதே மோசமான கொடிய குற்றங்களை இன்று பாலஸ்தீனியர்களுக்கு இழைத்து வருகிறார்கள். பாலஸ்தீனிய கல்விமானான எட்வர்ட் சயிட் இதைப்பற்றி புலம்புகையில் “பாதிக்கப்பட்டவர்களால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள்” எனக் குறிப்பிடுகிறார். இஸ்ரயேலின் உருவாக்கம் பாலஸ்தீனியர்களில் இரத்தத்தில் நனைக்கப்பட்டு உருவாக்ப்பட்டது என்றால் அது மிகையில்லை, அது தவிர்க்க முடியாத விஷயம் என்றால் அதைப் பற்றி பேசாமலிருப்பதே மேல்.
ஸ்ரீலங்கா ஊடகங்களின் முன்னுதாரணமான மாற்றம்
எனது ஏமாற்றம் பெருமளவில் தங்கியிருந்தது சண்டே ரைம்ஸ் முழு ஆசிரிய தலையங்கம் மற்றும் அதன் சகோதர பத்திரிகையான டெய்லி மிரர் என்பனவற்றில் நான் கொண்டிருந்த நம்பிக்கையிலேயே, பாலஸ்தீனியர்களின் பரிதாபகரமான நிலையை பற்றிய உண்மையான காரணங்களை நன்றாக அறிந்திருந்தும் அந்த சரித்திர உண்மைகளை நீங்கள் திரித்து அல்லது சீரழித்து பாலஸ்தீனியர்களின் பேரழிவை அணுகுவதில், தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்கிற உவமைக்கு புதிய எடுத்துக்காட்டை கடைப்பிடித்துள்ளீர்கள். 
உண்மையில் ஒரு காலத்தில், அதிக காலத்தக்கு முன்பு அல்ல, உங்கள் பத்திரிகை மற்றும் உங்கள் சகோதரப் பத்திரிகை என்பன பாலஸ்தீனிய விடயத்தில் அனுதாபிகளாக இருந்தன, வெள்ளையர் ஆட்சியின் கீழிருந்த தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரானபோராட்டத்தை போன்றே இதுவும் ஒரு மனிதாபிமான விடயம், சிலர் உலகத்தை நம்ப வைக்க முயல்வதைப் போல ஒரு முஸ்லிம் விவகாரம் அல்ல. இவை அனைத்தும் மாற்றமடைந்தது நமது நாடு இஸ்ரயேலுடன் ராஜதந்திர உறவை மேற்கொண்ட பிறகு மற்றும் இஸ்ரயேலிய தூதுவர் ஊடக நிலையங்களுக்கு வருகை தந்து பத்திரிகை ஆசிரியர் மற்றும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதன் பின்னருமே. அன்றைய தினத்திலிருந்து ஸ்ரீலங்காவின் ஆங்கில ஊடகங்கள் பலஸ்தீனிய விடயத்தில் தங்கள் ஆதரவு இனிமேலும் அவசியமில்லை என்பதைப் போன்று பாராமுகம் காட்டத் தொடங்கிவிட்டன.
சிங்கள ஊடக நண்பர்களிடமிருந்து நான் கேட்பது இன்னமும் மோசமாக உள்ளது. எனக்கு நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தெரிய வருவது, உங்களது சிங்களப் பத்திரிகையான தினமின புத்தளத்தில் முஸ்லிம்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றி பெருமளவிலான முஸ்லிம் எதிhப்பு பசப்புரைகளைக் கொண்டிருந்தது என்று. இது எப்படி நடந்தது? முஸ்லிம்கள் சிங்களவருடன் பக்கம் பக்கமாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துள்ளார்கள், மற்றும் அத்தகைய மோசமான கருத்துக்களை வெளியிட்டவர்கள் ஒருபோதும் ஒரு இஸ்ரயேலியனை சந்தித்தோ அல்லது சியோனிசம் என்றால் என்ன என்றோ அறியமாட்டர்கள் என்பது எனக்கு நிச்சயம். எனவே இத்தகைய கருத்துக்களை வெளியிட அவர்களைத் தூண்டியது எது?. ஒரு வேளை வலைத் தளங்கள் மற்றும் ஊடகங்களின் ஒரு பகுதியினர், ஆகியோர் மேற்கொள்ளும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம்தான் காரணமா. இஸ்ரயேலியர்கள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட இந்த திடீர் பாசம் இங்குள்ள தீவிரவாத சக்திகள் நடத்தும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு உப விளைவா?
இஸ்ராயேல் எல்.ரீ.ரீ.ஈக்கு பயிற்சியளித்தது
மற்றொருநாள் உங்கள் சகோதர பத்திரிகையான டெய்லி மிரர் ஒரு அபத்தமான கட்டுரையை வெளியிட்டு இராவணன் வழியாக சிங்களவர்கள் இஸ்ரயேலியர்களுக்கு உறவினர்கள் எனக்கூறி சிங்களவர்களையும் மற்றும் இஸ்ரயேலியர்களையும் இணைக்க முயற்சித்துள்ளது. எனது பத்திரிகை வாசிக்கும் காலம் முழுவதும் நான் இத்தகைய முழு அபத்தத்தை இன்னமும் கேள்விப் படவேயில்லை. அங்கே அந்த ஊடகத்தில் என்ன நடக்கிறது? மேர்வின் டீ சில்வாவை போல, ஸ்ரீலங்கா ஊடகங்களின் மூத்த ஊடகம் முழுக் குழப்பத்தில் மூழ்கியுள்ளதா., மற்றும் இஸ்ரயேலியர்களுடன் கூடிக் குலாவுவதற்கு ஏன் இந்த திடீர் அவசரம்? விக்டர் ஒஸ்ட்ரோவாஸ்கி தனது “சூழ்ச்சியின் வழியில்” என்ற புத்தகத்தில் இஸ்ரயேலியர்கள் எங்களை கருங் குரங்குகள் என அழைத்ததாக வெளிப்படுத்தியிருப்பது நினைவில்லையா? இஸ்ரயேலியர்கள் எல்.ரீ.ரீ.ஈக்கும் அதேபோல இராணுவத்துக்கும் பயிற்சி அளித்ததையும் ஒரு பயங்கரமான நாளில் கிட்டத்தட்ட அவர்கள் நேருக்கு நேர் எதிர்கொள்ள நேர்ந்ததையும் நாங்கள் மறந்து விட்டோமா?
இர்கன் போன்ற யூதர்களின் பயங்கரவாத பிரிவுகளைப் பற்றி நீங்கள் நன்கறிவீர்கள், லெவி மற்றும் கெஹன்னாவை சேர்ந்த மற்றவர்களும் ஆயுதம் மூலம் பலவந்தமாக இஸ்ரயேலை உருவாக்கினார்கள். யூதப் பயங்கரவாதிகள் வலையமைப்புத்தான் இஸ்ரயேலை உருவாக்கியது, மற்றும் இன்று வரை இஸ்ரயேல் என்கிற ஒரேயொரு நாடுதான் நியமிக்கப்பட்ட எல்லைகள் எதுவுமின்றி இருக்கிற ஒரு நாடு இருந்தும் நாங்கள் அதைப்பற்றி கண்டனங்கள் எதையும் கேட்டதில்லை. நாங்கள் கேட்பதெல்லாம் முற்றுகையைப் பற்றி அறிவித்தல் வழங்காது ஹமாஸ் ஏவுகணைகளை சுட்டதாக அல்லது எகிப்தின் பழைய மற்றும் புதிய கொடுங்கோலனான அல் பாத்தா அல் சிசியின் சிறிதளவு உதவியுடன் காசாவில் அது உருவாக்கியுள்ள திறந்தவெளி செறிவு முகாமில் இஸ்ரயேல் விதித்துள்ள தடையைப் பற்றக் கூறும் இஸ்ராயேலிய கதைகளை மட்டும்தான்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி:Jaffnamuslim

Post a Comment

0 Comments