
இரு அணிகளுக்குமிடையில் ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்
சமநிலையில் நிறைவடைந்தது. இலங்கையில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற
தொடரில் இலங்கை அணி 3 போட்டிகள் அடங்கிய தொடரில் 1 இற்கு 0 என வெற்றி
பெற்றது. இரு அணிகளும் 46 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில்
பாகிஸ்தான் அணி 17 போட்டிகளிலும் இலங்கை அணி 11 போட்டிகளிலும் வெற்றி
பெற்றுள்ளன. 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளும்
இலங்கையில் 18 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் பாகிஸ்தான்
அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8
போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
புதிய பயிற்றுவிப்பாளர் குழுவுடன் புதிய அணியாக அல்லது பல மாற்றங்களுடனான
அணியாக பாகிஸ்தான் அணி இந்த தொடரில் களமிறங்குகின்றது. இலங்கை அணி சார்பாக
மஹேல ஜெயவர்தன காலியில் விளையாடும் இறுதி டெஸ்ட் போட்டி இதுவாகும்.
பாகிஸ்தானுடன் இலங்கையில் வைத்து கடந்த காலங்களில் சோபிக்கத் தவறிய இவர்
இந்த தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பெறுதிகளுடன் ஓய்வு பெறுவார் என
நம்பப்படுகின்றது.
முதல் போட்டிசற்றுமுன்னர்ஆரம்பிக்கட்டுமுதலில்துடுப்படுத்தாடும் பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்கள் நஷ்டத்திற்கு 50 ஓட்டங்களை பெற்றுள்ளது.
0 Comments