ஊவா மாகாணத்தில் அரசாங்க தரப்பு மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக வழங்கப் படும் 25 லட்சம் நிதிக்கு மேலதிகமாக தலா 25 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிதி கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதியே வழங்கப் பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மொத்தமாக ஆறரைக்கோடி ரூபா மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதியின் மூலம் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தண்ணீர் பம்ப், மின் பிறப்பாக்கி, மண்வெட்டி, ப்லாஸ்டிக் கதிரைகள், கூரைத்தகடுகள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியன வினியோகிக்கப் படுவதாக தெரிய வருகிறது. இந்த செய்தி ஊவா மாகாண சபையின் பொறுப்பு வாய்ந்த பிரிவினரால் கசிய விடப்பட்டுள்ளது. ( ராவய 10/08/2014 முன் பக்க உப செய்தி. செய்தியாளர் தம்மிக்க ப்ரியதர்சன)
தமிழில்: எம். எல். ஹாஜா சஹாப்தீன்
நன்றி: ராவய


0 Comments