Subscribe Us

இது மும்பையில் ஒரு ரயிலில்.. வெளியே விட உள்ளே மழை அதிகம் பாஸ்.


மும்பையில் நேற்று பெய்த கன மழையை விட அந்த கன மழையால் மெட்ரோ ரயில் பயணத்தில் மக்கள் பட்ட பாடுதான் பெரும் செய்தியாகியுள்ளது. குளியலறையில் உள்ள ஷவர் போல மாறி விட்டது மெட்ரோ ரயில்கள்.. அதாவது மழை வெளியே பெய்கிறதா அல்லது உள்ளே பெய்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு தொர தொரவென ஒழுகியது மெட்ரோ ரயில்கள். இதைப் படம் பிடித்து டிவிட்டரில் போட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை காய்ச்சி எடுத்து விட்டனர். புகைப்படம் மட்டுமல்லாமல் வீடியோவையும் அப்லோட் செய்து வைரல் ஆக்கி விட்டனர்.

ஜூன் 8ம் தேதி முதல் மும்பையில் மெட்ரோ ரயில் ஓடி வருகிறது. பெரும் தாமதத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்டபோதிலும் மக்களிடையே நல்ல வரவேறைப் பெற்றுள்ளது இது.

ஆனால் நேற்று பெய்த மழையால் மெட்ரோ ரயிலின் வண்டவாளம்.. தண்டவாளத்தில் ஏறி விட்டது. ஆம் நேற்று ஒரு ரயிலின் பெட்டியில் மழை உள்ளே சர்ரென்று பெய்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர்.

கிட்டத்தட்ட குளியலறை ஷவர் போல அது காணப்பட்டது.

இதையடுத்து அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்கள் உடனடியாக இதைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பேஸ்புக், டிவிட்டரில் போட்டு மெட்ரோ ரயிலின் மானத்தை வாங்கி விட்டனர்.

புகைப்படம், வீடியோவைப் பார்த்தவர்கள் அடித்த கிண்டல்தான் செமையாக இருந்தது.

ஒருவர் இப்படிக் கருத்துச் சொல்லியிருந்தார்.. ஆபீஸுக்கு நேரமாகி விட்டதா,
குளிக்கலையா.. கவலைப்படாதீங்க, மெட்ரோ ரயிலில் ஷவர் அட்டாச் பண்ணியிருக்கிறார்கள் அதில் குளிக்கலாம்.

மெட்ரோ டிரெயின் இப்போது மெட்ரோ ரெய்ன் ஆக மாறி விட்டதே.. அபாரம் என்று ஆச்சரியப்பட்டிருந்தார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனம்தான் தற்போது இந்த ரயிலை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments