பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீது 10வது நாளாக இஸ்ரேல் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 261ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன நேற்றைய இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சற்றுமுன்வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக பதிவாகியுள்ளது.
சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள அதேவேளை பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ள அதேவேளை பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் கொடூர தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை கடந்த 10 நாட்களாக நடத்தி வருகிறது.
நேற்று ஒரே நாளில்34பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 261ஆக அதிகரித்துள்ளது.மேலும் பலஸ்தீன வைத்தியசாலை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க இஸ்ரேலிய ரானுவ வீரர் ஒருவர் சற்று முன் ஹமாஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலி உயிரிலந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

0 Comments