(அஸ்ரப் ஏ சமத்)
ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாண லங்கா தீப சனிக்கிழமையே வருவதுண்டு. ஞயிறு லங்கா தீப பத்திரிகையில் முதல் பக்க தலைப்புச் செய்தியில் அமைச்சர் றவுப் ஹக்கீம் படத்துடன் அவர் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸலாத்தில் இருந்து கொண்டு அளுத்கம விடயம் சம்பந்தமாக நாளர்ந்தம் மேற்கத்தய நாடுகளின் தூதுவர்களையும் சர்வதேச சமுகத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பற்றியும் அளுத்கம விடயத்தை பெரிது படுத்து சொல்லிவருவதாக செய்தி வெளியீட்டுள்ளது.
சிகல உருமைய கட்சியின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு எதிராக செயல்படும் விதம் சம்பந்தமாக ஏற்கனவே பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகரை சந்தித்து விளக்கமளித்துள்ளதாகவும். மேலும் ஏனைய இலங்கையில் உள்ள உயர் ஸ்தாணிகர் தூதுவர்களை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக இன்றைய சிங்கள பத்திரகையான மவ்பிமவில் கருத்து தெரிவித்துள்ளார்.


0 Comments