Subscribe Us

ஜனாதிபதி தலைமையில் மாநாடு ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

ஜனாதிபதி தலைமையில் அமைச்சர்கள், அரச சார்பு  நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான தெளிவூட்டல் மாநாடு  தற்போது பேருவளையில் (30)  நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இம்மாநாட்டுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக மாகாண முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் தேசிய தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துச் செல்லும் முறைகள் தொடர்பில் இதன் போது தெளிவுப் படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்தி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் டுவிட்டரில் வெளியடப்பட்டிருந்த படமே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments