பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியை அவர்களின்
குடும்பத்தினர் கட்டிப்போட்டு, கழுத்தை கூரிய ஆயுதத்தினால் குத்தி
கிழித்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு பஞ்சாபின் சத்ரா கிராமத்தை சேர்ந்த 17
வயதான இளம்பெண்ணும் 31 வயதான ஆணும் கடந்த ஜூன் 18ஆம் திகதி
குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு
பின் அப்பெண்ணின் தாய், தந்தையர் இருவரும் வீட்டிற்கு வந்து தங்களது
வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி
வீட்டிற்கு வந்தவுடன் காதல் திருமண ஜோடியை கயிற்றால் கட்டியதுடன்,
அப்பெண்ணின் தந்தை இருவரது கழுத்தையும் கூரிய ஆயுதத்தினால் அறுத்துள்ளனர்.
இது
குறித்த தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த பொலிஸார் அப்பெண்ணின் பெற்றோரை
கைது செய்தனர். பொலிஸாரின் விசாரணையின் போது பழங்குடி வகுப்பை சேர்ந்தவரை
மகள் திருமணம் செய்து கொண்டதால் தங்களது குடும்ப கௌரவம் பாதிக்கப்பட்டதாக
அவர்கள் கூறியுள்ளனர்.


0 Comments