Subscribe Us

பன்விலை பிரதேசத்தில் பெண்கள் உற்பட 27 பேர் பௌத்த மதகுருவை கடுமையாக தாக்கிய சம்பவம். (14 பெண்கள்)

(ஜே.எம்.ஹபீஸ்)
பன்விலைப் பொலீஸ் பிரிவிலுள்ள விகாரையொன்றின் மதகுருவைத் கடுமையாக தாக்கிய தாகச் சந்தேகிக்கப் படும் பெண்கள் உற்பட 27 பேர் எதிர் வரும் 3ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்த பௌத்த மதகுரு கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பன்விலைப் பொலீஸ் பிரிவில் உள்ள ஹாத்தலை ஸ்ரீ முனசிங்காராமய விகாரையின் மதகுருவே தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளார்.
சந்தேக நபர்களை தெல்தெனிய மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்த போது அவர் எதிர் வரும் 3ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார்.
கைதானவர்களில் 14 பெண்களும் 17 வயது சிறுவனும் அடங்குவர்.
மேற்படி சிறுவனை சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கும் படியும் நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments