Subscribe Us

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இறைவழிபாடு இன்று

ஏ.எஸ்.எம்.ஜாவித்

இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இடம் பெற்று வரும் வன்முறைகளின் பின்னணியில் – குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிராக அண்மையில் இடம் பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் நாட்டிலும், குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் இன, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்தவ. இஸ்லாமிய, இந்து, பௌத்த சமயத்தவர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் சர்வமத இறைவழிபாடு இன்று (25.06.2014) புதன் கிழமை மாலை 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை மன்னார் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. Like US: https://www.facebook.com/kalpitiyavoice

மன்னார் ஆர். பி. ஆர் அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வமத வழிபாட்டோடு இணைந்ததாக கவனயீர்ப்புப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் அதற்கான அனுமதியை பாதுகாப்புத் தரப்பினர் மறுத்திருந்தனர்.

இதனடிப்படையில் சர்வமத வழிபாட்டை மட்டும் நடத்துவதென மன்னார் சர்வமதப் பேரவை தீர்மானித்ததாக இந்த அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவராகிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.

இச்சர்வமத வழிபாட்டில் அனைத்து மக்களையும் கலந்துகொண்டு இன, மத நல்லிணக்கத்திற்காக இறைவேண்டல் செய்யுமாறு மன்னார் சர்வமதப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------

Post a Comment

0 Comments