Subscribe Us

முஸ்லிம் அமைச்சர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கி தலைகுனியும் விடயம்:ஜே.வி.பி.

அர­சாங்­கத்தின் ஆத­ர­வு­ட­னேயே முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. தம் இனத்தின் மீதான அடக்கு முறை­களை முஸ்லிம் அமைச்­சர்கள் வேடிக்கை பார்ப்­பது வெட்கித் தலை­கு­னிய வேண்­டிய விட­ய­மாகும் என்று ஜே.வி.பி. தெரி­வித்­தது.
 
 
சிறு­பான்மை இனத்­தவர் மீதான அடக்கு முறைகள் சர்­வ­தேச விசா­ர­ணை­களை வலுப்­ப­டுத்திவிட்­டது. அர­சாங்­கமே அனைத்­திற்கும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அக்கட்சி குறிப்­பிட்­டது.
 
இது தொடர்பில் ஜே.வி.பி. யின் ஊடகப் பேச்­சாளர் விஜித ஹேரத் தெரி­விக்­கையில்,நாட்டில் தற்­போது இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இன முரண்­பா­டு­க­ளுக்கும் முஸ்லிம் இனத்­தவர் மீதான அடக்குமுறை­க­ளுக்கும் அர­சாங்­கமே காரணம். அர­சாங்க இனவா­தி­களின் ஆத­ர­வு­ட­னேயே சிறு­பான்மை மக்கள் அழிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். 
அளுத்­கம இன முரண்­பாட்டு சம்­ப­வத்தை அர­சாங்கம் ஆரம்­பத்­தி­லேயே தடுத்து நிறுத்­தி­யி­ருக்க வேண்டும். கல­வரம் ஏற்­ப­டாது தடுத்­தி­ருக்க முடிந்தும் இன­வா­தி­களே பாது­காப்புப் படைகளின் உத­வி­யுடன் முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். இன்று சர்­வ­தே­சத்தின் மத்­தியில் நாம் அவ­மா­னப்­பட்டு நிற்­கின்றோம். இலங்கை தீவி­ர­வாத நாடு, அமை­தி­யில்­லாத இனப்­பி­ரச்­சி­னை­க­ளு­டைய நாடு என சர்­வ­தேசம் முத்­திரை பதித்து விட்­டது.
 
நாட்டில் இன­வாத அமைப்­புக்­க­ளையும் இன­வா­தி­க­ளையும் பாது­காத்து அவர்­களை சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கு அச்­சு­றுத்­த­லாக்கி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். மக்­களே இதற்­கான தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். ஒரு சில இன­வா­தி­களின் கருத்­துக்­களை நம்பி இரு இன மக்­களும் மோதிக் கொள்­ளாது சிங்­கள முஸ்லிம் மக்கள் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டால் நாட்டில் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்ள முடியும்.
 
இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவே அடக்குமுறைகள் கையா­ளப்­ப­டு­கின்ற நிலையில் முஸ்லிம் அமைச்­சர்கள் அர­சாங்­கத்­திற்குள் இருந்து கொண்டு அமைச்சுப் பத­வி­யினை தக்கவைத்துக் கொள்­வ­தற்­காக அமைதி காக்­கின்­றனர். தம் இனத்தின் மீதான அடக்குமுறை­களை இவர்கள் வேடிக்கை பார்ப்­பது வெட்­கப்­பட வேண்­டிய செயல். இவர்கள் தமது மக்­க­ளுக்­காக செயற்­பட எந்தத் தகு­தியும் இல்­லா­த­வர்கள்.
 
அதேபோல் நாட்டில் தற்­போது இடம்­பெறும் சிறு­பான்மை மக்கள் மீதான அடக்கு முறைகள் சர்­வ­தே­சத்­திற்கு நல்­ல­தொரு ஆதா­ர­மாக அமைந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு ஏற்­பட்­ட­தாக சர்­வ­தேசம் குற்றம் சுமத்தி சர்­வ­தேச விசா­ர­ணை­யினை மேற்­கொள்­ள­வுள்ள நிலையில் நாட்டில் முஸ்­லிம்­களும் அச்­சு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றமை சர்­வ­தேச விசா­ர­ணை­யினை வலுப்­ப­டுத்தும் செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. எனவே அர­சாங்­கமே இவை அனைத்­திற்கும் பொறுப்புக் கூறவேண்டும். அர­சாங்­கத்தின் மீதும் இரா­ணு­வத்தின் மீதும் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை உண்­மை­யென நிரூ­பிக்கும் செயலை அரசு செய்­கின்­றமை எதிர்­கா­லத்தில் மிகப் பெரிய சிக்­கலை ஏற்­ப­டுத்தி விடும்.
 
மேலும், மக்கள் விடு­தலை முன்­னணி இந்த அடக்குமுறை­களை கண்­டித்து கடந்த தினங்­களில் பல கண்­டன அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளது. நாம் நேர­டி­யாக இப்­பி­ரச்­சி­னை­களில் தலையிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனினும் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதம் ஏந்த வேண்டாம். அமைதியைப் பேணி ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments