Subscribe Us

header ads

அளுத்கம முஸ்லிம்களைத் தூண்டிய முஸ்லிம் ஒருவர் பற்றி இரகசிப் பொலிஸுக்கு தகவல்

ளுத்கம, பேருவைள பிரதேசங்களில் அசாதாரண சூழல் காணப்படும் சந்தர்ப்பங்களில் செயற்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் குறித்து இரகசியப் பொலிஸார் உட்பட புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அளுத்கம மற்றும் பேருவளைப் பிரதேசத்திலுள்ள கடைகளுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்த தொலைபேசி இலக்கங்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களின் போது பதிவாகியுள்ள காட்சிகளை சி.சி.டி.வி. கெமராக்களிலிருந்து பெற்று அவை தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவத்தின் பின்னர் அப்பிரதேசத்துக்கு வருகை தந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பிரதேசவாசிகளை தூண்டி விட்டதாக முறைப்பாடொன்றும் சாட்சிகளுடன் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments