Subscribe Us

மாலைதீவு சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அன்னாரின் பாரியாரான முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் நேற்று மாலை மாலைதீவு விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
இவர்களுக்கு மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூம் மற்றும் அன்னாரின் பாரியாரான பாத்திமா இப்றாஹீம் ஆகியோரால் மகத்தான வரவேற்ப்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து மாலைதீவின் தலைநகருக்கு சென்ற னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவையும் மாலைதீவின் உப ஜனாதிபதி கலாநிதி மொஹமட் ஜமீல் அஹமட் மற்றும் அன்னாரின் பாரியார் கவுலத்பாஹிம் ஆகியோர் வரவேற்னர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூம் ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவர். சுகாதாரம் முதலீட்டுத்துறை தொடர்பான பல ஒப்பந்தங்களிலும் இரு தலைவர்களும் கைச்சாத்திடவுள்ளனர். இலங்கை ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி இராப்போசன விருந்தளித்து கௌரவிக்கவுமுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இந்த விஜயத்தின் போது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூமையும் சந்தித்திக்கவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, ஏ.எச்.எம்.அஸ்வர், உதித் லொக்குபண்டார, லொஹான் ரத்வத்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்றுள்ளனர்.



Post a Comment

0 Comments