Subscribe Us

header ads

பேராதனை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று!

பேராதனை பல்கலைக்கழக 2013 ம் வருடத்துக்கான வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று (29) வியாழக்கிழமை பேராதனை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது.

காலை, மாலை என இரண்டு அமர்வாக நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பேராதனை பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பி.டபிள்யு. ஏபாசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இந்த பட்டமளிப்பில் 3179 பேர் பட்டம் பெறவுள்ளனர். இதில் 770 பேர் பட்டப்பின் படிப்பு பட்டத்தையும், 2409 பேர் இளமாணி பட்டத்தையும் பெறவுள்ளனர். காலை அமர்வில் கலைப்பீடத்தை சேர்ந்த 1133 பேரும், இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்த 128 பேரும் விவசாய பீடத்தை சேர்ந்த 226 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.

மாலை அமர்வில் மருந்துவ பீடத்தை சேர்ந்த 193 பேரும் பல் மருந்துவ பீடத்தை சேர்ந்த 68 பேரும் பொறியியல் பீடத்தை சேர்ந்த 429 பேரும் மிருக வைத்தியர் 179 பேரும் விஞ்ஞான பீடம் 450 பேரும் பட்டம் பெறவுள்ளனர்.

Post a Comment

0 Comments