Subscribe Us

header ads

ஷஃபான் மாத தலைப்பிறை மாநாடு நாளை

புனித ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை யைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (29ம் திகதி) வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.23 மணிமுதல் புனித ஷஃபான் மாதத்திற்கான பிறையைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல் கதீப்மார்கள், உலமாக்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பிரதிநிதிகள், ஷரீஆ கவுன்ஸில், மேமன், ஹனபி பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தலைப்பிறையைக் கண்டவர்கள் 0112432110, 0115234044, 0112390783, 0777316415 ஆகிய தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படு கின்றனர்.

Post a Comment

0 Comments