முஸ்லிம்களின் ஹலால் உணவில் ஆரம்பித்து தற்பொழுதுமுஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு அச்சமூகத்தின் பொறுமையைச் சோதிக்க இந்த இனவாத கும்பல்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சர்ச்சை தனிவதற்குள் மாவனல்லையில் மற்றுமொரு முஸ்லிம் வர்த்தகரின் ஹாட்வெயார் கடையொன்றை எரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இனங்களுடன் சகோதரத்துவமாக வாழ நினைக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது பொது பல சேனா அமைப்பு, ஏன் இவ்வாறான காழ்ப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது?. இந்த இயக்கம் கடந்த 3 வருட காலமாக இயங்கி இந்த நாட்டில் உள்ள பௌத்த மக்கள் குறிப்பாக பௌத்த இளைஞர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி தப்பபிப்ராயங்களை ஏற்படுத்தி அவர்களை தூண்டி விடுகின்றன.
முஸ்லிம்களின் ஹலால் உணவில் ஆரம்பித்து தற்பொழுது பொருளாதாரத்தை அழிப்பதில் இந்த சேனாக்கள் உக்தியைப் பாவிக்கின்றார்கள். முஸ்லிம் - பௌத்த இனக் கலவரத்தை உண்டுபண்னுவதற்கும் அதில் அவர்கள் குளிர்காய நினைப்பதுமே இவர்களது நோக்கமாகும்.
முஸ்லிம் சமுகத்தின் மீது தொடர்ச்சியாக வன்முறைகளையும் காழ்ப்புணர்வுக் கருத்துக்களையும் விதைத்து வரும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எல்லையை மீறி வருகின்றது.
முஸ்லிம் சமூகத்தினை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ள இந்த இயக்கத்தின் செயற்பாடுகளை அரச மேல்மட்டம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த அடாவாடித்தனங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு உறுதியளித்துள்ள நிலையில் அது உடனடியாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.
ஏனெனில் நாங்கள் அரசுடன் இணைந்து தாய்நாட்டுப் பற்றுடன் செயற்படும்போது இவ்வாறான செயல்கள் மூலம் எமது சமூகம் எங்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்கும்போது பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளோம்.
வடக்கில் புலிகள் அமைப்பினால் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட செயற்பாடுகளை விஞ்ஜிய நிலையில் இன்று பொது பல சேனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சட்டத்தையும் ஒழுங்கையும் இவர்கள் கையில் எடுத்துகொண்டு காட்டுத்தார்பாருடன் இந்த இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கௌரவமான காவியுடை தரித்துக்கொண்டு இனவாதத்தை கக்கி வரும் இவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு தீர்க்கமானதொரு முடிவு வேண்டும்.
தமிழர்களில் ஒரு சிலரோ அல்லது முஸ்லிம்களின் ஒரு சிலரோ இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவர். இக்காலகட்டத்தில் பெரும்பான்மை இனத்தின் ஒரு பிரிவினர் இந்த அடாவடித்தனங்களில் ஈடுபடும்போது மட்டும் அரசோ அல்லது இந்த நாட்டில் உள்ள மகா சங்கத்தினர்கள் மௌனம் ஏன் ? இதன் பின்ணனி என்ன?' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments