Subscribe Us

header ads

மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த?

எதிர்வரும் 26ஆம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக

இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. "அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது. இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கு முடியும் என கொழும்பு கருதுகின்றது" என இவ்விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
நரேந்திரமோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் பெரும்பாலும் கலந்துகொள்வார் என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.tamilmirror

Post a Comment

0 Comments