Subscribe Us

விமானத்தில் சந்திந்த ஆணுடன் விமானத்தின் கழிவறையில் உறவுகொண்ட பெண்

விமானத்தில் வைத்து சந்தித்த ஆணுடன் பிரித்தானியப் பெண்ணொருவர் அவ்விமானத்தின் கழிவறையிலேயே பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

லண்டன் கட்விக் நகரிலிருந்து அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரை நோக்கிச் சென்ற வேர்ஜின் எயார்லைன்ஸின் பயணிகள் விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிவைச் சேர்ந்த மேற்படி பெண் சுமார் 25 வயதினை உடையவர் எனக் கூறப்படுகின்றது. இவர் தனது பெற்றோருடன் விடுமுறைக்காக அமெரிக்காவுக்கு சென்றவேளையில் விமான இருக்கையின் அருகில் இருந்த ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிகள் உறங்கிய பின்னர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் பிரித்தானியப் பெண், தான் விமானத்தில் சந்தித்த ஆணுடன் விமானத்தின் கழிவறையில் வைத்து உறவு கொண்டுள்ளார்.

கழிவறையிலிருந்து வெளியான இவர்களது சத்தம் வெளியில் கேட்கக்கூடியதாக இருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர் விமான உழியரால் கதவை திறக்கும் படி அந்த ஜோடி வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து இவர்கள் பொலிஸாரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் பின்னர் எச்சரித்து குற்றங்கள் எதுவும் பதிவு செய்யாது விடுதலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments