இங்கிலாந்து நாட்டில் 82 வயது தொழிலதிபர் ஒருவர் புற்றுநோயால் துடித்துக்கொண்டிருந்த
தன்னுடைய 77
வயது கருணைக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய
மனைவி படும் கஷ்டத்தினை பார்க்க தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் அதனால்
அவரை கருணைக்கொலை செய்துவிட்டதாகவும், தன் மனைவி இல்லாத உலகத்தில் தான்
வாழ விரும்பவில்லை என்றும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் பங்குவர்த்தகம் செய்யும் தொழிலதிபர் Harold Ambrose என்பவருக்கு வயது 82 . இவருடைய 77 வயது மனைவி Wendy சிலகாலமாக புற்றுநோயில் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தரமான சிகிச்சை அளித்த அவரை நன்கு கவனித்த வந்த தொழிலதிபர், பின்னர் தனக்கும் dementia என்ற மூளை பாதிப்பு நோய் வந்துள்ளதை அறிந்தார். தான் கூடியவிரைவில் இறந்துவிடக்கூடும் என்று எண்ணிய arold Ambrose, தான் இறந்த பின்னர் தனது மனைவியை அன்புடன் கவனித்துக்கொள்ள யார் இருக்கின்றனர் என்று முடிவு செய்து தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டார்.
பின்னர் காவல்துறையினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துவிட்டு, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு தற்கொலையும் செய்துகொண்டார். தானும் தனது அன்பு மனைவியும் ஒருவரை ஒருவர் இதுநாள் வரை பிரிந்ததில்லை என்றும், எனவே மரணத்திலும் தாங்கள் ஒன்றுசேர விரும்புவதாகவும் அவர் கடிதத்தில் எழுதியுள்ளார். மரணம் அடைந்த இருவரது பிணங்களும், இங்கிலாந்தின் Colchester என்ற இடத்தில் உள்ள அவர்களுடை வீட்டில் போலீஸார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தகுந்த மரியாதையுடன் இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.


0 Comments