Subscribe Us

பத்திரிகை சுதந்திரத்தின் அவசியமும் செய்தித்தாளின் தோற்றமும்

ஒரு நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றம் சுபீட்சம் என்பவற்றிற்கு உறுதுணை புரிவது பத்திரிகையே என்று கூறினாலும் மிகையாகாது. ஏலவே இதன் அத்தியாவசியத்தைக் கருத்தில் கொண்டு சர்வதேசம் எங்கும் ஆட்சி புரிகின்ற அரசாங்கங்கள் அதற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளன எனலாம். ஆகவே மக்களுக்கு பிரதானமாகத் தேவைப்படுகின்ற செய்தித்தாளின் தோற்றம் பத்திரிகையின் சுதந்திர மேம்பாடு செய்தி நிறுவனங்களின் பரிணாமம் வரலாறு என்பவை பற்றி விரிவாக ஆராய்வது உலக பத்திரிகை தினமான இன்று வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் கூறும். சமூக வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எல்லோருக்கும் உலகப் போக்கை நன்கு அறிந்து கொள்வது அத்தியாவசியமானதொன்றாகும். 
 
முதலில் நாம் பத்திரிகையின் தோற்றத்தைப் பார்ப்போம் உலகில் முதன் முதல் வெளிவந்த செய்தித்தாள் (News paper) சீனாவின் தலைநகரன பீஜிங்கில் வெளிவந்தது. ஆறாம் நூற்றாண்டில் பிரசுரமான இப்பத்திரிகைக்கு ட்சிங் பவோ என்று நாமம் சூட்டப்பட்டது. இப்புதினத்தாளுக்கு பத்திரிகை சுதந்திரம் பேணப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் இது முற்றுமுழுதாக அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொன்றாகும். 
 
இதனை தொடர்ந்து உலகெங்கும் அனேகம் தனியார் நிறுவனங்கள் பத்திரிகைகளைப் பிரசுரித்து வாசகர்களைத் திருப்திப்படுத்தின. இதன் கா ரணமாக அரசாங்கங்கள் பத்திரிகை சுதந்திரம் அளிக்கவேண்டிய நிலைமை உருவாகியது. ஆகவே சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக கட்டுரைகள் செய்திகள் கேலிச்சித்திரங்கள் என்பவற்றை தினமும் வெளியிடலாயின. 
 
பத்திரிகைகள் பொதுவாக இரு வகைப்படுகின்றன ஒன்று நாளிதழ் மற்றயது வார இறுதியில் வெளிவருகின்ற வார வெளியீடு வார மஞ்சரி ஞாயிறு வெளியீடு என்பவையாகும். இது நாட்டுக்கு நாடு வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். 
 
இலங்கையில் வெளியாகின்ற பத்திரிகைகள் அனைத்தும் பத்திரிகை தர்மத்தைப் பேணி பிரசுரித்து வருகின்றன. விஞ்ஞானம் தொழில்நுட்பம் குன்றிய புராதன காலத்தில் பத்திரிகையை அச்சுக் கோர்த்து வெளியிட இயலவில்லை. அதற்குப்பதிலாக அச்சு இயந்திர கூடத்தில் (Printing Press) எழுத்துக்கள் செதுக்கிய மரத்துண்டுகள் மூலம் அச்சடித்து வெளியிட்டனர். கம்பியூட்டர் இணையத்தளம் போன்றவை பாவனைக்கு வராத இந்நிலையில் இவ்வழிமுறையே சில நூற்றாண்டு காலம் தொடர்ந்ததாகவும் அறிய முடிகின்றது. 
 
ஐரோப்பாவை (Europe) பொறுத்தவரை கிறிஸ்தவ மக்களின் புனித நகரங்களிளொன்றான ரோமாபுரியை (Rome) வதிவிடமாகக் கொண்ட எழுத்தாளர் நிருபர் கவிஞர் போன்றவர்கள் தமது ஆக்கங்களை இந்தப் பத்திரிகையில் தான் பிரசுரித்து வந்தனர். தொடர்கதைகள் கேலிச்சித்திரங்கள் (cartoons) கூட வெகு ரம்மியமான முறையில் வெளிவந்தன. வர்த்தகர்களின் நலன் கருதி விளம்பர பக்கமும் (Advertisement page) பிரத்தியேகமாக வெளிவந்ததாம். இங்கிலாந்தில் முதன் முதல் தோன்றிய பத்திரிகை எலிசபெத் மாலெட் என்று அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக பிரசித்தி பெற்று விளங்குகின்ற லண்டன் டைம்ஸ் (London Times) என்ற பத்திரிகை ஆயிரத்து எழுணூற்று எண்பத்தைந்தில் ஜோன் போஸ்டர் என்பவரால் உலகரெஜிஸ்டார் என்ற பெயருடன் தொடக்கப்பட்டது. 
 
அமெரிக்காவில் முதலில் தோன்றிய செய்தித்தாள் பொது நிகழ்ச்சி நிரல் என்பதாகும். இந்த நிறுவனத்தை முதலில் போஸ்டன் நகரில் பெஞ்சமின் மாரிஸ் நிறுவினார். அந்த நேரம் பத்திரிகைகள் சுதந்திரத்தை மீறும் வகையில் நடந்து கொண்டமையினால் அமெரிக்க காங்கிரஸ் அரசு இந்தப்பத்திரிகையை அதன் முதல்  இதழிலேயே தடை செய்து விட்டது. இதன் பின்னர் வெளிவந்த நாளிதழ்கள் அனைத்தும் பத்திரிகை சுதந்திரத்தை முற்று முழுதாகப் பேணி செய்திகளைப் பிரசுரிக்கலாயின. ஆனால் அதன் விலை அதிகமாக இருந்தமையினால் கணிசமானவர்கள் வாங்கி படிக்க முடியவில்லை. ஆயிரத்து எண்ணூற்று முப்பத்து மூன்றில் மிகவும் குறைந்த விலைக்கு பத்திரிகையொன்று பிரசுரமாகி வெளிவரத் தொடங்கியது இதற்கு சன் (Sun) என நாமம் சூட்டப்பட்டது. அதன் பின்னரே பத்திரிகை வாசகர்களின் எண்ணிக்கை பல மடங்காகியது. 
 
இலங்கையிலும் பத்திரிகை சுதந்திரம் நீண்ட நாட்களாக அமுலில் இருந்த போதிலும் பத்திரிகைகள் வெளிவராமல் தடை செய்த நிகழ்வு இடம் பெறத்தான் செய்தது. நம் நாட்டில் சுமார் ஐந்து தசாப்த காலங்களுக்கு முன்னர் எம்.டி.குணசேன நிறுவனத்தினர் மும்மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியிட்டனர். ஆங்கிலத்தில் 'சன்'னும்  தமிழில் 'தினபதி'யும் வார மற்றும் சகோதர ஏடுகளான 'சிந்தாமணி' 'தந்தி' என்பன பிரசுரமாகின. தினசரி மாலை வேளையில் வெளியான தந்தியின் விலை ஐந்து சதம் மட்டுமே என்பது விசேட அம்சமாகும். 
 
அக்கால கட்டத்தில் அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒருவரே பல பத்திரிகைகளை அனேகமான ஊர்களில் வெளியிட்டு வந்த வழக்கம் இருந்தது. அவற்றைச் சங்கிலிப் பத்திரிகைகள் என்பர் அதேவேளை ஒரு ஊரில் பிரசுரமாகும் பத்திரிகையை வானொலி மூலம் வேறு நகரங்களுக்கும் அதே செய்திகளோடு அச்சிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
இன்றைய நவீன விஞ்ஞான இலத்திரனியல் யுகத்தில் அந்த நடைமுறையை இணையம் தம்வசப்படுத்திக் கொண்டது. தற்போது இலங்கையிலும் யாழ்ப்பாணம் உட்பட சில மாகாண தலைநகரங்களில் பெரும்பாலும் அதே செய்திகளோடு அச்சிடும் முறை நடைமுறையில் உள்ளது. 
 
ரஷ்யாவில் வெளிவந்த பிரதான பத்திரிகைகள் ஈஸ்ட் வெஸ்ரியா பிராங்டா என்பவையாகும். இந்தியாவில் ஔரக கசீப் காலத்திலேயே செய்தித்தாள் விற்பனைக்கு விடப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அங்கு முதன் முதலி கல்கத்தாவிலே பத்திரிகை அச்சிடும் முறை தொடக்கி வைக்கப்பட்டது. சென்னையில் முதன் முதல் வெளிவந்த பத்திரிகை சென்னை கூரியர் என்பதாகும் இந்தியாவில் முதன் முதல் வெளியிடப்பட்ட ஆங்கிலப்பத்திரிகை  த ஹிண்டு (the hindu) ஆகும். இதனை ஜீசுப்பிரமணிய ஐயர் தோற்றுவித்தார். இதனை வெளிநாடுகளுக்கும் விமான மூலம் அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் இந்திய பத்திரிகைகள்  அரசியல் செய்திகளை வெளியிடுவதில்லை. இலக்கியம் மதம் சமூக சீர்திருத்தம் பொது அறிவு ஆகிய விடயங்களை மட்டுமே பிரசுரித்து வந்தன. பாரதத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்தே அரசியல் செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 
 
இலங்கையில் மும் மொழிகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கி சுமார் நூறு ஆண்டு காலமாகின்றன. பத்திரிகைகளில் வெளிவருகின்ற நிருபர்களின் (Paper Reporter) செய்தி தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு செய்திகள் எல்லாம் செய்தி நிறுவனங்களிடமிருந்தே பெறப்படுகின்றன. பி.ரி.ஐ.(P.T.I) யூ.என்.ஐ. (U.N.I) போன்றவற்றுடன் இலங்கையின் லங்கா புவத் என்பன முக்கியமானவையாகும். 
 
ஆகவே செய்தி தாளின் தோற்றத்தையும் பத்திரிகை சுதந்திரத்தின் அவசியத்தையும் வாசகர்களாகிய நாம் தெரிந்து கொள்வது சர்வதேச பத்திரிகை தினமாகிய இன்றைய தினம் சாலச்சிறந்தது என்பது புத்தி ஜீவிகளின் அபிப்பிராயமாகும்.

Post a Comment

0 Comments