Subscribe Us

header ads

வலுக்கிறது ஆளும் கூட்டணிக்குள் மோதல்! - விமல் வீரவன்சவுக்கு எஸ்.பி.திஸநாயக்க பதிலடி.

ஆளும்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்சவுக்கும், அரசாங்க உயர்மட்டத்துக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், விமல் வீரவன்சவை உயர்தரம் சித்திபெறாதவர் என்று அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க விமர்சித்துள்ளார். உயர்தரம் சித்திபெறா விட்டாலும் அமைச்சர் விமல் வீரவன்சவினால், புத்தகங்கள் வாசிக்கும் அறிவு உள்ளது தானே என்று அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். பிபி.ஜயசுந்தர ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க பிபி.ஜயசுந்தரவை பாராட்டிப் பேசுவதால் அவரது அமைச்சரவை பத்திரங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுவதாகவும் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
  
நிதி சம்பிரதாயம் பொருளாதார தத்துவம் தொடர்பில் சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அமைச்சர் விமல் வீரவன்சவால் 'ஜய வேவா' மாத்திரமே சொல்ல முடியும். அமைச்சு செயலாளர் என்பது சாதாரண பதவி அல்ல எனவும் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் அதில் இருக்கின்றனர். அவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் அளிக்கப்படுகிறது. அமைச்சர் மற்றும் செயலாளருக்கு இடையில் காணப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் திட்டங்கள் செயற்படுத்தப்படும் அமைச்சர் ஒருவர் சட்டவிரோத செயலுக்கு அனுமதி கோரினால் அதனை நிராகரித்து விளக்கம் அளிக்கும் அதிகாரம் அமைச்சு செயலாளர்களுக்கு இருக்கிறது. பிபி.ஜயசுந்தர என்பவர் பொருளாதார நிபுணத்துவம் பெற்ற, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றச் செயற்படும் நபர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments