Subscribe Us

header ads

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தில் ஆளும் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி மாநாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தனிப்பட்ட நபர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க வேண்டியது கடமையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் விமல் விரவன்சவோ அல்லது அவரது பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

விவாதத்தின் போது யார் யார் உரையாற்றுவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments