Subscribe Us

ஆறுதலாக உங்களோடு ஒரு அரை நிமிடம் !

-முஹம்மத் முஸ்தகீம்-

மேடைப் பேச்சுக்கள், விவாதக் களங்கள், மாநாடுகள் …… இவற்றை விட பல்லாயிரம் மடங்கு வேகத்தில் இஸ்லாம் இப்பூவுலகில் வளர்ந்தது ” அஹ்லாக்” (நற்பண்பு) களாலேயே. யாரால் தான் இதை இந்த இடத்தில் மறுத்துறைக்க முடியும்?.

“அஹ்லாக்குகளை பூர்த்தி செய்யவே நான் இப்பூவுலகிற்கு அனுப்பப் பட்டேன்” என்று அமுத வாக்கு பகர்ந்த அண்ணல் எம் பெருமானாரை இறுதி நபியாகப் பெற்ற எம் சமூகத்தில் இப்போது எஞ்சி இருக்கும் அஹ்லாக்குகள் தான் எத்தனை?

* பாதைகளில் நோவினை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவது ஈமானின் ஒரு கிளை என்று முழங்கிய இஸ்லாத்தை வாரிசாகப் பெற்ற எம் சமூகம் வாழும் சுற்றுச் சூழலைப் போன்ற அசிங்கமான ஒரு சுற்றுச் சூழலை அந்நிய சகோதரர்கள் வாழும் சுற்றுப் புறங்களில் காண முடியுமா? வீட்டிலுள்ள குப்பைகளையும் தானே பாதைகளில் கொட்டி விட்டுச் செல்கின்றோம்? …. திருந்துவோம் சகோதரர்களே!

* நேர்மையான வர்த்தக சமூகம் என்ற நற்பேறு பெற்ற எம் சமூகத்தில் இருந்து இன்று ஒரு காசோலையைக் கூட நம்பிக்ைகயாகப் பெற முடியாமல் இருக்கிறதே! எம்மவர்களே நம்மவர்களை கொடுக்கல் வாங்கல்களில் நம்பாமல் அந்நியவர்களை நம்பும் அளவுக்கு சென்று விட்டார்களே? இந்த இலட்சணத்தில் அந்நிய சகோதரர்கள் எங்கே எம்மை நம்பப் போகிறார்கள்? …. பற்றிப் பிடிப்போம் சகோதரர்களே குர்ஆன் சுன்னாவை.

* சஹீதாகினும் கடன் மன்னிக்கப்படாது என்ற பிரகடத்தை முழங்கிய மார்க்கத்தின் வாரிசுகள் நாம். கணக்கில்லாமல் இருக்கிறோமே கடன் விடயத்தில். பிழைப்புக்கு பெட்டிக் கடை செய்பவனையும் விட்டு வைத்தோமா என்ன? 100, 200, 500, 1000 என்று கடன் எடுத்து விட்டு திருப்பிக் கொடுக்கும் எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாமல் இருக்கிறோமே. சில்லரைப் பிரச்சினைகளைக் கூட அலட்டிக் கொள்ளும் நாம் எடுத்த கடனைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லையே!. எமது தொழுகைகள், நோன்புகள், குர்ஆன் திலாவத்துக்கள், திக்ருகளை நாளை மறுமையில் கடன் எடுத்தவருக்கு தாரை வார்க்கவா போகிறீர்கள்? கொடுத்து விடுங்கள் சகோதரர்களே உங்கள் கடன்களை எண்ணி எண்ணி.

* வாசிப்பீராக ! என்ற முதல் வேத வாக்கை வாரிசாகப் பெற்ற நாம் எங்கு இருக்கிறோம் கல்வித் துறையில்? பட்டி தொட்டி எல்லாம் , மூலை முடுக்ெகல்லாம் பள்ளி கட்டும் நாம் பாடசாலைகளை ஏன் தாம் புறக்கணிக்கின்றோமோ? அதிகரித்த பள்ளிவாயல்கள் எம்மை அடிதடியில் மோதவிட்டதைத் தவிர வேறு என்ன சாதித்து விட்டது? கிறிஸ்தவ நிறுவனங்கள் கிறிஸ்தவர், சிங்களவர், முஸ்லிம், தமிழர் என்று பாராது மூலை முக்ெகல்லாம் புகுந்து கல்விப் பணி செய்கிறதே! கண்ணைக் கூட வௌியில் காட்டக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும் நாம் மகப்பேற்றின் போது அந்நிய டாக்டர்களிடம் அனைத்தையுமே காட்டி விடுகின்றோமே! 9 பாடத்திலும் A சித்தி பெற்று விஞ்ஞானத்தில் உயர்கல்வியைத் தொடர வழியில்லாமல் எமது எத்தை சகோதரிகள் ஏங்கிக் கிடக்கின்றார்கள்? அவர்களை டாக்டர்களாக உருவாக்க எம்மிடம் எந்த செயற்றிட்டமும் இல்லையே! அந்தோ பரிதாபம்.

* “சுத்தம் ஈமானின் பாதி ” என்ற கொள்கைப் பிரகடனத்துக்கு நொந்தக் காரர்கள் நாம். வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றம் தான் நிறையப் பேரிடம் வீசுகிறதே! ” உங்களுக்கு கக்ஷ்டமாக இருக்கும் என்ற நிலை இல்லாவிட்டால் ஐந்து நேர தொழுகைக்கும் பல் துலக்குவதை கடமையாக்கி இருப்பேன்” என்பது நபியவர்களின் வாக்கல்லவா? நீண்ட காலம் தஹ்வா புரிகிறோம். ஆனால் மிஸ்வாக் என்பதற்கும் மிஸ்வாக் குச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகிறோமே. தினமும் இருமறை பல்துலக்கி, தினமும் குளித்து, அழகாக உடுத்து தலைசீவி, தாடியை சீர்படுத்தி நறுமணம் கமழ அழகாக இருந்தால் அல்லாஹ் கோபித்துக் கொள்ளப் போகிறானா? அவன் அழகானவனல்லவா? அழகைத் தான் விரும்புவான். அழகாக இருப்போம் சகோதரர்களே !

* அந்நிய சமய சகோதரர்களை ” அந்நியன்” என்றே ஆக்கி விட்டோமே! “மாறு சாதி” என்றே பெயர் குத்தி விட்டோமே ! அவனும் ஆதமுடைய மகனல்லவா? அவனோடு நல்ல விடயங்களில் நல்லுறவு பாராட்டினால் பாவத்தாளி ஆகி விடுவோமா என்ன?

அரை நிமிடம் கூட எடுத்து விட்டேன். இன்னும் தொடரலாம் எமது குறைபாடுகளை. ஆனால் அதற்கு இந்த முகநூல் தளமல்ல இடம் கொடுக்காது ஒங்க அவசமை் தான் இடம் கொடுக்காது. ஏனெனில் ஆறுதலாக வாசிக்கும் களமல்ல இந்த முகநூல் தளம். அதற்குத் தான் இருக்கிறதே பத்திரிகைகள், சஞ்சிகைகள் ….

யாரையும் நோவிக்கும் எண்ணம் எனக்கில்லை. எனக்கும் சேர்துத் தான் சொன்னே். முடிக்கிறேன் இத்தோடு. வஸ்ஸலாம்.

Post a Comment

0 Comments