Subscribe Us

15 ஆவது உலக இளைஞர் மகாநாடு ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பம்:

உலக இளைஞர் மாநாடு 2014 (WCY2014 ) இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.  சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.

இம்மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஹம்பாந்தோட்டை மாகரம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ஏனைய நிகழ்வுகள் நாளை முதல் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வுகள் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன.

2015 ஆம் ஆண்டின் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சிரலில் இளைஞர்களை பிரதானப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.

2000 ஆம் ஆண்டு ஐ.நாவினால் வகுக்கப்பட்ட புத்தாயிரமாண்டின் அபிவிருத்தி இலக்குகளுக்கான கால எல்லை 2015 ஆண்டு நிறைவடைகிறது. அதன்பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகளில் இளைஞர்கள் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேற்படி தொனிப்பொருள் வகுக்கப்பட்டுள்ளது.

169 நாடுகள் இதில் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 121 நாடுகள் இதில் பங்குபற்றுவதை உறுதிப்படு;த்தியிருந்தன.

உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த 18 முதல் 29 வயது வரையான 1500 இளைஞர் யுவதிகள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டினதும் அரசாங்கத்தின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவரும் யுவதியொருவரும் உத்தியோகபூர்வ பேராளர்களாக பங்குபற்றவுள்ளனர். அத்துடன் சர்வதேச இளைஞர் துரிதச் செயலணியினால் தெரிவுசெய்யப்பட்ட விளிம்புநிலையிலுள்ள  குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 350 இளைஞர் யுவதிகளும் இம்மாநட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து 173 பேர் இம்மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.

ஐ.நா.வின் பொதுச் சபையின் தலைவரான கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷ், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகாரத பிதிதிநிதியான  அஹமட் அல் ஹிந்தாவி ஆகியோரும் இம்மாநாட்டில் அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.

28 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் விவகார அமைச்சர்கள் மற்றும் 62 அதிகாரிகள் இம்மாநட்டில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சியை ஏற்படுத்துலும் பொறுப்புடைமையும், அனைத்து மட்டங்களிலும் இளைஞர்கிளன் பங்களிப்பை உள்ளடக்குதல், இளைஞர் உரிமைகள், பூகோளமயமாக்கல் மற்றும் இளைஞர் தலைமையிலான அபிவிருத்தி, அசமத்துவத்தை ஒழித்தல், பாலின சமத்துவம், மிக ஆபத்திலுள்ள இளையோர் உட்பட விளிம்புநிலையிலுள்ள இளைஞர்களை வலுவூட்டல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளன. மாநாட்டின் இறுதியில் 'இளைஞர்கள் தொடர்பான கொழும்பு செயற்திட்டம்' எனும் தலைப்பில் ஆவணமொன்று வெளியிடப்படவுள்ளது.

Post a Comment

0 Comments