1568 - ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

1808 - ஸ்பெய்னின் மட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.

1885 - பெல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தார்

1889 - எதியோப்பியாவின் அரசர் இரண்டாம் மெனெலிக், இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.

1928 - அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி மௌஸின் படத்தினை வரைந்தார்.

1933 – ஜேர்மனியில் சர்வாதிகாரி அடோவ் ஹிட்லரினால் தொழிற்சங்கங்கள்  தடை செய்யப்பட்டன.

1945 - இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன்தலைநகர் பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.

1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.

1964 - வியட்நாம் போரில் சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.

1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் முதல் தடவையாக அடைந்தனர்.

1972: அமெரிக்காவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 91 ஊழியர்கள் பலியாகினர்.

1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1999: பனாமாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மிரேயா மொஸ்கோஸோ தெரிவானார்.

1999: ஐரோப்பிய மத்திய வங்கி, பெல்ஜியத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

2000: ஜி.பி.எஸ். சாதனத்தின் பாவனை இராணுவத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக நீடிக்க மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அறிவித்தார். 

2004 - நைஜீரியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 630 முஸ்லிம்கள்  கொல்லப்பட்டனர்.

2008: பர்மாவில் சூறாவளி காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

200: சிலியில் எரிமலையொன்று வெடித்ததர் சுமார் 4500 மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

2011: அல் கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.