Subscribe Us

Dr. இல்யாஸ் களத்தில் : பொது பல சேனாவை மன்னிப்பு கேட்கக் கோரினார் !! தனியாக நின்று வீர உரையாற்றினார்..!! ( படங்கள் )

(PT)

அதிகம் பொருட் செலவில்லாமல் ஆர்ப்பாட்டங்கள் , ஊர்வலங்கள் நடத்துவதில் தனக்கு நிகர் தானே என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  வைத்தியருமான ஐ.எம்.இல்யாஸ்.

இன்று ஜூம்மாத் தொழுகைக்குப் பின்னர் 1400 சுற்று வட்டத்தில்  இடம் பெற்ற பொது பல சேனாவை தடை செய் என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போதே அவர் ஒரு சுமாரான அளவு கூட்டத்தைக் கூட்டி சிறிய பரபரபொன்ரை ஏற்ப்படுத்தினார்.

அவரது உரையின் போது பொது பல சேனாவை தடைச்செய்யக் கூறினார். மேலும் அவரது பாணியில் அரசாங்கத்தையும், அரசாங்கத்தின் முஸ்லிம் அங்கங்களையும் ஒரு பிடிபிடித்தார்.

இந்த ஆர்ப்பட்டட்டத்தின் போது புத்தளம் போலீஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் போக்குவரத்து போலீசார் கடமையில் ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஆகா மொத்தம் இது ஒரு டாக்டர் இல்யாஸ் பாணி ஆர்ப்பாட்டம் என்று சொல்ல முடியும்.









Post a Comment

1 Comments

  1. எல்லாம் பப்லிஸிடீ தா...

    ReplyDelete