Subscribe Us

header ads

அதிரவைத்த இந்த சம்பவம் பாகிஸ்தானில்.(வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானில் ஒரு இளவயது பெண்ணும் அவரின் தாயாரும் ஒரு கூட்டுக்குள் தம்மை தாமே அடைத்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளம் பெண்ணுக்கு அநீதி இழைத்தவர்களை போலீசார் கைது செய்து விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தம்மை தாமே அடைத்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹசினா பிபீ என்ற இளவயது யுவதியை ரஹீம் பக்ஸ் என்பவர் ஆயுதமுனையில் கற்பழித்துவிட்டு வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இரண்டு மாதங்களின் பின்னர் தாம் கர்ப்பமானதை அறிந்ததாகவும் கருக்கலைப்பு செய்ய ரஹீம் அழைத்து சென்றதாகவும் அதன் போது அவருடன் வந்த முவர் Mohammad Qasim, Bashir Husain , Hashim.ஆகியோர் முன்று நாட்கள் குழுவாக கற்பழித்ததாகவும் பின்னர் வெள்ளை வெற்று பேப்பரில் கைவிரல் அடையாளத்து பெற்றுக்கொண்டு  அனுப்பியதாகவும் குறித்த பெண்  ஹசினா பிபீ  வாக்குமூலம் வழங்கியுள்ள அதேவேளை குறித்த பெண்ணுக்கு கடந்த 2014 பிப்ரவரி மாதம் பெண்குழந்தை ஒன்று பிறந்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை போதுமான ஆதாரங்கள் இல்லாததால் பிணையில் விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் போலிசார் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments