Subscribe Us

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30

313 : ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

1006 : மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.

1483 : இந்த நாளில் புளுட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது.  ஜூலை 23, 1503 வரை நெப்டியூன் சுற்றுவட்டத்துக்குள் புளுட்டோ அங்கு இருந்தது.

1803 : ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்ஸிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியது.

1838 : நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து பிரிவதாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1900 : ஹவாய் பிராந்தியம், ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.

1938: ஹட்டர்ஸ்பீல்ட் டவுன் மற்றும் பிரெஸ்டன் கழங்களுக்கிடையிலான போட்டி, தொலைக்காட்சியில்  ஒளிபரப்பப்பட்ட முதலாவது இங்கிலாந்து எவ்.ஏ. கிண்ண போட்டியானது.

1945 : ஜேர்மனிய சர்வாதிகாரி  அடோல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.

1961: சோவியத் யூனியனின் அணுவாயுத ஏவகணைகளைத் தாங்கிய முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1975 : வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.

1993 : ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.

1993: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாக விளங்கிய மோனிகா செலஸ் ஜேர்மனியில் நடைபெற்ற போட்டியொன்றின்போது  ரசிகர் ஒருவரால் கத்தியால் குத்தி காயப்படுத்தப்பட்டார்.

1999 : ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.

2004: ஈராக்கின் அபு கிரைப் சிறைச்சாலையில்  கைதிகளை அமெரிக்கப் படையினர் பாலியல் ரீதியில் துன்புறுத்தும் புகைப்படங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன.

2013: நெதர்லாந்து அரசி பியட்ரிக்ஸ் பதவியிலிருந்து விலகினார். ஆவரின் மகன் வில்லெம் அலெக்ஸாண்டர் புதிய மன்னராக பதவியேற்றார்.

Post a Comment

0 Comments