யுவதி ஒருவரைக் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட முயன்றவர் கால்தடுக்கி குழியில் விழுந்த நிலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
புத்தளம் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் பணிபுரியும் 21 வயது யுவதி ஒருவர் இரவு 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை பாலவி, நாகவில்லு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றில் மூவரினால் பலவந்தமாக ஏற்றப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட குறித்த யுவதியை பாழடைந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கூட்டிச்செல்ல முற்படுகையில் அங்கிருந்த குழி ஒன்றில் கால் தடுக்கி விழுந்ததில் சந்தேகநபரொருவரின் கால் எலும்பு முறிந்து காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந் நிலையில் யுவதி தப்பி வந்து அயலவர்களின் உதவியுடன் அருகிலுள்ள பொலிசில் முறையிட்டதை அடுத்து சந்தேக நபர்கள் மூவரும் கைதாகியுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் இதற்கு முன்பும் புத்தளம் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவு தொடர்பான ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
புத்தளம் நீதிவான் ரங்க திசாநாயக்காவின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 9ஆம் திகதி வரை சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறைப் பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் புத்தளம் வைத்தியசாலையில் சந்தேக நபர் சிகிச்சை பெற்றுவருவதாகதவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments