காணாமல் போன் மலேசிய விமானம் MH 370-இன் பிளாக் பாக்ஸை
கண்டுபிடிக்க ஓஷன் ஷீல்ட் என்ற கப்பற்படை கப்பல் அனுப்பப்பட்டுள்ள நிலையில்
தேடும் பகுதி ‘இந்திய பெருங்கடல் முழுதும்’ என்று சில நிபுணர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தலைமை வகிக்கும் அமெரிக்க
கப்பற்படை அதிகாரி கேப்டன் மார்க் மேத்யூஸ் இப்போது இருக்கும் சூழ்நிலையை
வைத்துப் பார்க்கும்போது பிளாக் பாக்ஸை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே
தோன்றுகிறது. என்றார்.
பிரச்சனை என்னவெனில் இந்த பிளாக் பாக்ஸ் லொகேட்டரை சுமந்து வரும் ஓஷன்
ஷீல்ட் கப்பல் 319,000 கிமீ தேடும் பரப்பளவுப்பகுதிக்கு 3 அல்லது 4
நாட்களுக்கு வர முடியாது என்று தெரிகிறது. பிளாக் பாக்ஸின் பாட்டரி
சக்தியும் இன்னும் 3 நாட்களுக்கே உள்ளது.
ஆகவே “தேடுதல் பகுதியை எவ்வளவு பரப்பளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது” என்கிறார் கேப்டன் மேத்யூஸ்.
தற்போது தேடும் பகுதி இந்திய பெருங்கடல் அளவுக்கு உள்ளது இதில் பிளாக் பாக்ஸை பேட்டரி பவர் போவதற்குள் கண்டுபிடிப்பது கடினம்.
இத்தனைக்கும் பிளாக் பாக்ஸைக் கண்டுபிடிக்கும் பிஞ்சர் லொகேட்டர் என்ற
கருவியுடன் கடலில் சென்றிருக்கும் ‘ஓஷன் ஷீல்ட்’ என்ற கப்பல் உயர்
தொழில்நுட்ப வகையறாவாகும்.
பிளாக் பாக்ஸிலிருந்து சிக்னல்களை இந்தக் கருவி 1.6 கிமீ தூரத்தில்
இருந்தால்தான் சரியாக கணிக்கும். பிளாக் பாக்ஸிலிருந்து சிக்னல் அனுப்பும்
அமைப்பு 45 நாட்களுக்கு செயலில் இருக்கும் என்றாலும் பேட்டரி சக்தியைப்
பொறுத்து இருக்கிறது என்கிறார் கேப்டன் மேத்யூஸ்.
மேலும் சிக்கல் என்னவெனில் தேடுதல் குழு மலேசிய விமானத்தின்
பாகங்களைக் கண்டுபிடித்தாலும் கடல் ஆய்வு நிபுணர்கள் வந்து எந்த இடத்தில்
விமானம் விழுந்தது என்பதைக் கணித்தால்தான் பிளாக் பாக்ஸை கண்டுபிடிக்க
முடியும்.
விமானம் என்ன ஆனது என்பது பற்றிய விசாரணையின் பரப்பு மிக பெரியது,
மலேசியாவுக்குவுக்கு அதனைச் செய்யும் பலம் இல்லை என்று மலேசிய அரசு
தெரிவித்துள்ளது.

0 Comments