Subscribe Us

header ads

இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் 18 வருடங்கள்

(Nf) இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் 18 வருடங்கள்
இலங்கை அணி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
1996 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு நாளில் பாகிஸ்தானின் லாஹூர் கடாபி மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை அணியுடன் அவுஸ்திரேலிய அணி பலப்பரீட்சை நடத்தியது.
இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிக்கொண்டு உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது.
இலங்கை அணியை வெற்றிக்காக வழிவகுத்த அர்ஜூன ரணத்துங்க அன்றைய தினம் நாணையசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்த விடயம் அன்றைய வர்ணணையாளர்களின் கருத்துக்களுக்கு இலக்கானது.
வேகப்பந்து வீச்சாளர்களான சமிந்த வாஸ், பிரமோதய விகரமசிங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளரகளான முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா ஆகியோரின் சிறந்த பந்துவீச்சு அவுஸ்திரேலிய அணியை 241 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.
இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 23ஆக இருக்கும் சந்தர்ப்பத்தில் தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் கலுவித்தாரண ஆகியோரை அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச்செய்தனர்.
அதனையடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக துடுப்பாட்டத்தில் மைதானத்தை அலங்கரித்த அசங்க குருசிங்க மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் இணைந்து 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
தனது சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அரவிந்தடி சில்வா ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களை பெற்றார்.
அரவிந்தவுடன் இணைந்த அணித்தலைவர் அர்ஜூன ரணத்துங்க 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காது இணைப்பாட்டமாக பெற்று வெற்றியிலக்கை கடந்து உலக கிண்ணத்தை இலங்கை அணி முதற்தடவையாக சுவீகரிக்க உதவினர்.
தொடரின் சிறந்த வீரராக சனத் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டதுடன், இறுதிபோட்டியின் சிறப்பாட்டக்காரராக அரவிந்த டி சில்வா தெரிவானார்.

Post a Comment

0 Comments