சட்டத்தரணிகள், டாக்டர்கள், ஆசிரியர்கள் எனக் கல்விமான்களுக்கு மட்டும்தானா அரசியல் சொந்தமானது?
வர்த்தகர்கள், தொழில் எதுவுமே இல்லாதவர்கள், எட்டாம் வகுப்பு சித்தி யடை யாதவர்கள் என எத்தனையோ பேர் இன்று உலகில் அரசி யலில் உள்ளார்கள். அவ்வா றிருக்க நடிகர்கள், நடிகைகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனும் சட்டம் உள்ளதா?
என தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அனார்க்கலி கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகர், நடிகைகளாலும் அரசியலில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை கடந்த தென்மாகாண சபையில் நிரூபித்துக் காட்டியவள் நான். நடிகர், நடிகைகள் என்றால் கல்வியறிவில் லாதவர்கள் எனும் தவறான எண்ணம் சிலர் மனதில் உள்ளது. அது தவறு.
நான் பட்டப்படிப்பை மேற்கொண்டவள். எனது கல்வித் தகைமையை வெளிக்காட்டினால் பலர் ஆச்சரியப்படுவர்.
நடிப்பு என்பது நான் விரும்பித் தேர்ந்தெடுத்த எனது கலைத்துறை சம்பந்தப்பட்டது. இனிமேலும் நடிகர், நடிகை அரசியலுக்கு வருவதைக் குறைவான கண்ணோட்டத்தில் எவரும் பார்க்கக் கூடாது எனவும் அனார்க்கலி கேட்டுக் கொண்டார். தென்மாகாணத்தில் கடந்த நான் மேற் கொண்ட வேலைத்திட்டங்களை அப்பகுதி மக்கள் நன்கறிவர். அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவே நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்.
எனக்குப் பெயரும், புகழும் தேவையில்லை. அது என்னிடம் கலைத்துறை மூலமாகத் தாராளமாகவே உள்ளது. அரசியல் மூலம்தான் அதைத் தேட வேண்டும் எனும் தேவை எனக்கு இல்லை எனவும் அனார்க்கலி தெரிவித்தார்.


0 Comments