12,600 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட
ஆண் குழந்தையொன்றின் எச்சங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுவானது நவீன
அமெரிக்கர்களினது பூர்வீகக் குடியினர் ஆசியாவிலிருந்து நீண்ட காலத்திற்கு
முன் மறைந்த நிலப்பாலமொன்றினூடாக அமெரிக்காவை வந்தடைந்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக சர்வதேச நிபுணர் குழுவொன்றின் ஆய்வொன்று கூறுகின்றது.
12600 ஆண்டுகளுக்கு முன்னர் மொன்டானாவில் புதைக்கப்பட்டிருந்த அந்தக்
குழந்தையினது எச்சங்கள் கொல்விஸ் கலாசாரத்தை சேர்ந்த அங்கத்தவர்
ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அமெரிக்க பூர்வீக குடிகள் அமெரிக்காவிலிருந்து வந்ததாக நம்பப்படுகின்றது.
மேற்படி கொல்விஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பாலகனின் குடும்பத்தினர்
தற்போது நவீன அமெரிக்கா பூர்வீக குடிகள் 80 சதவீதத்தினரது நேரடி
மூதாதைகளாவர்.
இந்த பாலகனது மரபணுக்களானது கனடாவிலுள்ள பூர்வீகக் குடிகளை விட மத்திய
மற்றும் தென் அமெரிக்க பூர்வீக குடிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக
உள்ளது.


0 Comments