Subscribe Us

header ads

மல்லாவியில் பத்தாயிரம் ரூபா பணமும் ஐந்து கிலோ கோழி இறைச்சியும் இலஞ்சமாகப் பெற்ற பொலிஸார்

5 கிலோ கோழி இறைச்சியையும் 10 ஆயிரம் ரூபா பணத்தையும் காவல்துறைப் பொறுப்பதிகாரி இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று மல்லாவி காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் வன்னி முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி காவல்துறை நிலையத்திற்குச் சென்ற முறைப்பாடு ஒன்றை காவல்துறையினர் முறையற்ற விதத்தில் அணுகியுள்ளனர்.

இரண்டு தரப்புகள் சண்டையிட்டு ஒரு தரப்பினர் மறு தரப்பாருக்கு கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மல்லாவி காவல்துறை நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தனர்.

காவல்துறையினர் இரு தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.  ஆனால், வெட்டிய நபர்களிடம் இருந்து 5 கிலோ கோழி இறைச்சியையும் 10 ஆயிரம் ரூபா பணத்தையும் பெற்றுக்கொண்ட மேற்படி காவல்துறை பொறுப்பதிகாரி, அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் காவல்துறை நிலையத்தில் வைத்தே விடுவித்துள்ளார்.

இதனால் வெட்டு வாங்கிய நிலையில் படுக்கையில் கிடந்த குடும்பஸ்தருக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

இதேபோன்று, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் இலஞ்சம் பெறுவதில் குறியாக நிற்கின்றனரே தவிர குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில்லையென்றும் இதனால் நிரபராதிகள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அப்பால், காவல்துறையினரின் இந்தச் செயற்பாட்டால் வன்னியில் குற்றங்கள் பெருகி வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments