Subscribe Us

தாயின் பல்லை உடைத்த நபருக்கு பல்லை உடைக்க நீதிமன்றம் தீர்ப்பு!

தனது தாயின் தாடையில் கை முஷ்டியால் குத்தி அவரது பல்லொன்றை உடைத்ததை ஒப்புக்கொண்டுள்ள நபரொருவருக்கு அதே வகையில் அவரது பல்லொன்றை உடைக்க சவூதி அரேபிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது அத்துடன் பெயர் வெளியிடப்படாத மேற்படி நபருக்கு 5 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் ஒவ்வொரு 10 நாளுக்கும் ஒரு தடவை உள்ளூர் சந்தையொன்றில் வைத்து 40 கசையடி தண்டனையை நிறைவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் தாயார் தன்னை தனது மகனிடமிருந்து காப்பாற்ற பொலிஸாருக்கு அழைப்பு விடுத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.அவரது தாயார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
குறிப்பிட்ட நபர் ஸ்திரமான மனநிலையில் உள்ளவர் எனவும் அவர் சம்பவம் இடம்பெற்ற போது போதைவஸ்தையோ அற்ககோலையோ உள்ளெடுத்திருக்கவில்லையென மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மத அடிப்படையில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் எனக்கூறி தீர்ப்பை அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments